வன்மம் என்ற சொல்லிற்கான உண்மையான அர்த்தம் என்ன.? | Vanmam Meaning in Tamil

Advertisement

Vanmam Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் அர்த்தம் பகுதியில் வன்மம் என்பதற்காக அர்த்தங்களை பதிவிட்டுள்ளோம். நாம் வன்மம் என்ற வார்த்தையை பலபேர் கூற கேட்டிருப்போம். அப்படி என்ன வன்மம் உங்களுக்கு… என்று பல இடத்தில் வேகமாக சண்டை போடும் அளவிற்கு பேசுவார்கள். ஆனால், வன்மன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலபேர் யோசித்து கொண்டிருப்போம். எனவே, அப்படி வன்மம் என்பதற்கான அர்த்தத்தை தேடுபவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது, வன்மம் என்ற சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை இப்பதிவில் பின்வருமாறு எடுத்துக்காட்டுடன் பதிவிட்டுள்ளோம். வன்மன் என்பது அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்றாகும். அதனை பற்றி கீழ்வருமாறு விவரமாக பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

What is The Meaning of Tamil Word Vanmam:

வன்மம் என்பது ஒருவரை பற்றி மனதிற்குள் தீராத பகை உணர்வை வைத்திருப்பது ஆகும். நீண்ட நாட்கள் காத்திருந்து, சமயம் பார்த்து நமக்கு பிடிக்காதவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல் ஆகும். அதாவது, வன்மம் என்பதை தீராத பகை உணர்வு என்று கூறலாம்.

பகை, போட்டி சண்டை உள்ளிட்ட காரணத்தால் மனதில் ஏற்படும் பழிவாங்கும் எண்ணத்துடன் கூடிய பகை உணர்வு வன்மம் ஆகும்.

எடுத்துக்காட்டு:

உன்னை கத்தியால் குத்தும் அளவிற்கு அவனுக்கு இவ்வளவு நாட்களாக உன்மேல் வன்மம் உள்ளது.

நீ செய்யாத ஒரு விஷயத்தில் உன்னை மாட்டிவிடகூடிய அளவிற்கு உன்மேல் என்ன வன்மம் அவருக்கு..

ஏதோ வன்மம் வைத்துக்கொண்டு தான் உன்னிடம் கோபமாகவும் வெறுப்பாகவும் நடந்து கொள்கிறான்.

Vanmam Meaning in English Word:

வன்மம் என்பதை ஆங்கிலத்தில் Vengeance என்றும் கூறுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா
இன்சொல் என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா
நாளிகேரம் என்பதன் பொருள்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement