Varsha Meaning in Tamil
பொதுவாக நாம் அனைவரும் பேசும் வார்த்தைக்கான உண்மையான தமிழ் அர்த்தங்கள் நம்மில் பலருக்கு தெரிவது இல்லை. பேசும் வார்த்தை என்னவோ ஒன்றாக இருக்கும். ஆனால் அதற்கான பொருள் அல்லது அர்த்தம் என்பது பல விதங்களில் இருக்கும். இத்தகைய முறை ஆனது நமக்கு வைக்கும் பெயர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்வில் வைக்கும் பெயர் தான் நாம் வாழும் கடைசி காலம் வரை தொடரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு சிறப்புகளை கொண்டுள்ள பெயர்களை வைப்பதற்கு முன்பாக ஒரே ஒரு முறை அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் பெயர்களில் ஒன்றான வ எழுத்தில் வர்ஷா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வர்ஷா பெயர் அர்த்தம்:
வர்ஷா என்ற பெயருக்கு தமிழில் மழை என்பது அர்த்தம் ஆகும். இப்பெயர் ஆனது ஒரு இனிமையான பெயராக இருப்பதால் பெரும்பாலான மக்கள் இதை குழந்தைகளுக்கு விரும்பி வைக்கிறார்கள். மேலும் இப்பெயர் ஆனது பெண் குழந்தைகளுக்கான பெயர் ஆகும்.
இத்தகைய பெயரினை உடையவர்கள் பொறுமை மற்றும் பொறுப்பு கொண்டு பிறருக்கு உதவும் மனப்பக்குவம் உடையவராக இருப்பார்கள். அதேபோல் நண்பர்களுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுப்பவராக இருப்பார்கள்.
சுயநலமற்ற குணம் கொண்டவராகவும், பிறர் வைக்கும் நம்பிக்கைக்கு உதாரணாமாகவும் இருப்பார்கள். அதோடு மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதீத பாசம் உடையராகவும் இருப்பார்கள்.
மேலும் இப்பெயரினை கொண்டவர்கள் நேர்மையாக இருந்தாலும் கூட கொஞ்சம் குணத்தில் திமிருடன் நடந்து கொள்வார்கள்.
Varsha Name in Numerology Tamil:
V- அதிகப்படியான உள்ளுணர்வு குணம் கொண்டவராக திகழ்வீர்கள்.
A- உங்களுக்கான லட்சியம் மற்றும் வகிக்கும் தலைமை பொறுப்பினை பற்றி அதிகமாக சிந்திக்கும் மனப்பான்மை உடையவர்கள்.
R- அதிக ஆற்றல் மற்றும் புகழினை உடையவராக இருப்பீர்கள்.
S- உங்களின் குணம் மற்றும் செயல் ஆனது பிறரை ஈர்க்கும் வகையில் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருக்கும்.
H- தொலைநோக்கு பார்வை உடையவராக இருப்பீர்கள்.
A- தனக்கான லட்சியம் மற்றும் வகிக்கும் தலைமை பொறுப்பினை பற்றி மட்டுமே சிந்திக்கும் குணம் கொண்டவர்.
நியூமராலஜி முறை:
பெயர் | பெயருக்கான அர்த்தம் |
V | 22 |
A | 1 |
R | 18 |
S | 19 |
H | 8 |
A | 1 |
Total | 69 |
இப்போது மேலே உள்ள அட்டவணையின் முறைப்படி வர்ஷா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 69 என்ற எண் கிடைத்து இருக்கிறது. அப்படி என்றால் 69 என்ற எண்ணிற்கான கூட்டுதொகை (6+9)= 15 ஆகும்.
ஆகவே மீண்டும் 15 என்ற எண்ணிற்கு கூட்டுத்தொகை கணக்கிட வேண்டும். (1+5)= 6 ஆகும். எனவே வர்ஷா என்ற பெயருக்கு அதிர்ஷ்டமான எண் 6 ஆகும்.
நியூமராலஜி முறைப்படி வர்ஷா என்ற பெயரினை உடையவர்கள் பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, நேர்மையான, நட்பு, இரக்கமுள்ள மற்றும் உறவுகளை மதிப்பவர் என்பது அர்த்தம் ஆகும்.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நவிலன் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |