Vitiligo (விட்டிலிகோ) என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Vitiligo Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல், இப்பதிவில் ஒரு அருமையான தகவல் ஒன்றினை பற்றி பார்க்கலாம். அதாவது, Vitiligo என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன.? Vitiligo என்றால் என்ன.? இதுபோன்ற விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Vitiligo (விட்டிலிகோ) என்ற வார்த்தையை பெரும்பாலான இடங்களில் கூற கேட்டிருப்பீர்கள். அதிலும் முக்கியமாக, மருத்துவமையால் மருத்துவர் கூற கேட்டிருக்கலாம். ஆனால், Vitiligo என்ற வார்த்தைக்கான அர்த்தம் பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது. ஆகையால், Vitiligo பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

What is Meaning For Vitiligo in Tamil:

Vitiligo (விட்டிலிகோ) என்றால் தோல் நிறமி இழத்தல் என்று அர்த்தம். Vitiligo (விட்டிலிகோ) என்பது ஒரு தோல் நோய் ஆகும். அதாவது, Vitiligo (விட்டிலிகோ) என்பது தோலில் உள்ள வெள்ளைத் திட்டுகள் ஆகும். சருமத்தில் நிறமியை உருவாக்கும் செல்களான மெலனோசைட்டுகள் அழிக்கப்படும்போதும் அல்லது செயல்படுவதை நிறுத்தும்போதும் Vitiligo ஏற்படுகிறது. இந்நோய் ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு என்றும் கூறப்படுகிறது. உடலில் மேற்புற தோலில் மட்டுமே வெள்ளைத்திட்டுகள் தோன்றும். நாளைடையவில் இந்த வெள்ளைத்திட்டுகள் பெரிதாகி உடல் முழுவதும் பெரிய அளவில் மாறிவிடும்.

விட்டிலிகோ எந்த வயதினறுக்கும் வரலாம். ஆனால் குறிப்பாக, 10 முதல் 30 வயதுடையவர்களுக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளது. முக்கியமாக, இது உடலின் எல்லா பகுதிகளிலும் ஏற்படும். ஆனால், இதனால் பெரிதும் பாதிப்பு இருக்காது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.

விட்டிலிகோ வருவதற்கான முக்கியமான காரணம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே ஆகும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்நோயால் 0.5% முதல் 2% வரையிலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள்
Burp என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா.
Lipoma என்பதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்!!
Code Red என்ற வார்த்தைக்கான அர்த்தம் இது தானா

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

 

Advertisement