VLDL Cholesterol Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் VLDL கொலஸ்ட்ரால் என்றால் என்ன..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் சாதாரணமாக ஒரு பெரிய வாக்கியம் அல்லது வார்த்தையும் சுருக்கி இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளில் கூறுவோம். உங்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டுமானால் SMS எஎன்பதை நாம் அதிகமாக கூறியிருப்போம். ஆனால் அதற்கான விரிவாக்கம் மற்றும் அவற்றிற்கான அர்த்தத்தை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டோம். SMS என்றால் Short Message Service என்பது விரிவாக்கம். எனவே இதேபோல் நமக்கு தெரியாத பல வார்த்தைகள் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான VLDL என்றால் என்ன..? அதற்கு தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is VLDL Cholesterol Means in Tamil:
VLDL என்பதற்கு Very Low Density Lipoprotein என்பது விரிவாக்கம் ஆகும். இதனை தமிழில் மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் என்று கூறுவார்கள்.
VLDL என்பது கொழுப்பு ஆகும். இது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகையான கொலஸ்ட்ரால் ஆகும். மேலும், லிப்பிடுகள் (கொழுப்புகள்) மற்றும் பிற பொருட்களை கல்லீரலில் இருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு வகை துகள் என்றும் கூறலாம்.
VLDL என்பது தமனிகளில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தி இதய நோய் உருவாக காரணமாக அமைகிறது. எனவே இதனை மோசமான கொலஸ்ட்ரால் என்று கூறுகிறார்கள்.
VLDL ட்ரைகிளிசரைடுகள், கொழுப்பு மற்றும் பிற லிப்பிட்களால் உருவாகி கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் பிறகு, இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இது உடல் முழுவதும் பயணித்து, பல்வேறு திசுக்களுக்கு லிப்பிட்களை வழங்குகிறது.
நாளடைவில் இது இறுதியாக குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (DLDL) கொழுப்பாக மாறும். இது பெரும்பாலும் “கெட்ட” கொலஸ்ட்ரால் என்று குறிப்பிடப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
Spoilers என்ற வார்த்தைக்கான உண்மையான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா. |
சதய விழா என்றால் என்ன |
MICR என்றால் என்ன..MICR பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.. |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |