Wish you The Same என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Wish you The Same Meaning in Tamil

பொதுவாக நம்முடைய தாய் நாட்டில் தமிழ் மொழி பேசப்படுகிறது, அது போல மற்ற நாடுகளிலும் தாய் மொழி என்பது இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழ் மட்டும் போதாது வேறு மொழியையும் அறிந்திருக்க வேண்டும். அப்படி எல்லா மொழிகளையும் கற்று கொள்ள அதிக நாட்கள் ஆகும், ஆனால் அடிப்படையாக இருக்கும் ஆங்கில மொழியை கற்று கொள்ளலாம்.

ஆங்கில மொழியை கற்று கொள்வதற்கு முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் பல்வேறு ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Wish you The Same என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Wish you The Same Meaning in Tamil:

பொதுவாக பண்டிகையாக இருந்தாலும் சரி, பிறந்த நாள், கல்யாண நாள் போன்றவற்றிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். இந்த வாழ்த்துக்களானது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தெரிவிப்பார்கள். சில பேர் தமிழில் தெரிவிப்பார்கள், சில பேர் ஆங்கிலத்தில் தெரிவிப்பார்கள். நாம் வாழ்த்துக்களை தெரிவித்தால் அவர்கள் பதிலாக நன்றி என்பதை Thank you என்று கூறுவார்கள்.

Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..!

அதுவே சில பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறும் போது ஒருவர் வாழ்த்து தெரிவிக்கிறார் என்றால் அவர்களுக்கு நாம் பதில் வாழ்த்து கூறுவது போல இருக்கும். அதற்கு பெரும்பாலானவர்கள் Same to You என்று கூறுவார்கள். ஆனால் இது போல எத்தனை வருடத்திற்க்கு தான் சொல்லி கொண்டு இருப்பீர்கள். நம்மை Upgrade செய்து கொள்ள வேண்டும். இந்த வார்த்தைக்கு மட்டுமில்லை பல வார்த்தைகளுக்கு இப்போ இருக்கும் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி கூறுவதற்கு நம்முடைய அறிவு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் Wish you The Same என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்கு Wish u happy Diwali என்று கூறினால் அவர்களுக்கு Thank You and same to u என்று கூறாதீர்கள். அதற்கு பதிலாக என்ன கூறலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Wish u happy Diwali-   Wish You the Same என்று கூறுங்கள், Wish You the Same என்பதற்கு உங்களுக்கு அதே வாழ்த்து என்பது அர்த்தமாக இருக்கிறது. 

Thank you and wish you the same meaning in tamil:

Thank you and wish you the same என்பதற்கு நன்றி மற்றும் உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள் என்பது அர்த்தமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக கூறுகிறேன்,உங்களுக்கு Happy Diwali என்று கூறுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். அப்போ பதிலுக்கு நீங்கள் Thankyou and wish you the same என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement