Xylophone Meaning in Tamil
பொதுவாக நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. அதில் நமது தாய்மொழியான தமிழில் நாம் பேசும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். அதிலும் நமக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டால் மருத்துவர் கூறும் அர்த்தங்கள் நமக்கு அவ்வளவாக தெரிந்திருக்காது. என்ன தான் சொல்கிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை விட அந்த வார்த்தைகளை நம்மால் உச்சரிக்க முடியாது. அதனால் தான் நமது பதிவில் பல்வேறு வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Xylophone என்பதற்கான அர்த்தத்தையும் அதன் பயன்பாட்டையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Xylophone Meaning in Tamil:
Xylophone என்பது ஒரு இசை கருவியாகும்.
Xylophone பல மாறுபட்ட அளவை கொண்ட மர பலகைகளை மற்றும் கம்பிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு இசைக்கருவியாகும். இந்த பலகைகள் வெவ்வேறு விதமான பொருட்களிலும் தயாரிக்கப்படும். அந்த பலகைகள் மீது தட்டி இசைகளை எழுப்ப சுத்தியலை போன்று இரண்டு மரத்தால் உருவாக்கப்பட்ட குச்சிகள் பயன்படுத்தப்படும். அந்த பலகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலியை எழுப்பும் விதமாக தயாரிக்கப்பட்டிருக்கும்.
Xylophone என்பது Idiophones மற்றும் Slenthem துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாளக் கருவியாகும்.
“Xylophone” என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான Xylon என்பதிலிருந்து வந்தது.
அதாவது Xylon என்பது மரத்தை குறிக்கிறது.
ஒரு Classical Music கருவியாகும். இதனை அதிகமாக ஆப்பிரிக்க இசை மற்றும் பல வகையான நாட்டுப்புற இசையில் வாசிக்கப்படுகிறது.
Xylophone உருவான வரலாறு:
முதல் Xylophone கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக நம்புகின்றனர். பின்னர் அது பிற்காலத்தில் ஆப்பிரிக்காவிற்கு பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. Xylophone கருவிகள் 9 ஆம் நூற்றாண்டின் தென்கிழக்கு ஆசியாவில் இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிமு 2000 இல், 16 இடைநிறுத்தப்பட்ட மரக் கம்பிகளைக் கொண்ட ஒரு வகையான மர-ஹார்மோனிகான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |