வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: April 2, 2025 3:42 PM
Follow Us:
Yashika Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Yashika Name Meaning in Tamil | யாஷிகா பெயர் அர்த்தம்

பொதுவாக நாம் அனைவருக்குமே நமது பெயர் என்றாலே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நமது பெயர் தான் நமது முக்கியமான அடையாளம் ஆகும். அதாவது நமது பெயர் தான் நம்மை மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டுகிறது. அதனால் யாராவது ஒருவர் நமது பெயரை பற்றி ஏதாவது சின்னதாக குறை கூறிவிட்டாலும் நமது மனம் மிகவும் கஷ்டப்படும். நம்மில் ஒரு சிலர் நமது பெயரைப்பற்றி பரிகாசம் செய்தவர்களிடம் சண்டைக்கு சென்று விடுவோம். அந்த சண்டையில் நமது பெயரின் பெருமைகளை கூறுவோம். அதாவது எனது பெயர் இவ்வளவு சிறப்பானது எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி உங்களின் பெயரையும் யாராவது பரிகாசம் செய்து விட்டால் அவர்களிடம் உங்களின் பெயரின் சிறப்பு மற்றும் அர்த்தத்தை கூறி சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் யாஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Yashika Meaning in Tamil | யாஷிகா தமிழ் அர்த்தம்

Yashika Meaning in Tamil

 யாஷிகா என்ற பெயருக்கு வெற்றி, பிரபலமானவர், புகழ் மற்றும் பெருமை என்பது பொருள் ஆகும். யாஷிகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.   யாஷிகா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் “வெற்றி பெற்றவள்” அல்லது “புகழ் பெற்றவள்” என்பது அர்த்தமாக இருக்கிறது. 

மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த யாஷிகா என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த நண்பராக இருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் சுயநலமாக இருப்பதை விரும்பவே மாட்டார்கள். அதே போல் இவர்கள் எப்போதும் மற்றவர்களை தான் சார்ந்து இருப்பார்கள். மேலும் இவர்களிடம் இயற்கையாகவே மிகவும் உதவும் குணம் இருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் மிகவும் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும் இருப்பார்கள். இவர்கள் தனிமையை விரும்பாதவர்களாகஇருப்பார்கள், கூட்டத்தோடு இருப்பதற்கு தான் விரும்புவார்கள். இவர்களுடைய தோற்றம் மற்றவர்களை ரசிக்க கூடியதாக இருக்கும்.

இவர்கள் எந்த செயலையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் செய்ய கூடிய செயல்களில் வெற்றியை காண கூடியவராக இருப்பார்கள். இவர்களுடைய நடத்தையானது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார்கள்.

வர்ஷினி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

Yashika Name Numerology in Tamil:

Name Numerology Number
Y 7
A 1
S 1
H 8
I 9
K 2
A 1
TOTAL
29

 

இப்போது யாஷிகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 29 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+9) = 11 என்பதாகும்.

அடுத்து 11 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 11-ற்கான கூட்டு தொகை (1+1) =2 ஆகும். ஆகவே யாஷிகா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.

யாஷிகா பெயரிற்கு மதிப்பெண் 2 என்பதால் மிகவும் உணர்ச்சிகரமான, அன்பான, ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவை யாஷிகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

இவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் எதுவென்றால் பச்சை நிறம். அதே போல் இவர்களை அதிர்ஷ்ட கிரகம் எதுவென்றால் நிலவு.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் தன்விகா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்

தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் இது தானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now