ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்..!
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் சில இந்த பகுதியில் கூறப்பட்டுள்ளது. அவற்றை தினமும் பின்பற்றி வர சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். சருமம் என்றும் புத்துணர்ச்சி பெற்று இளமையுடன் இருக்கும்.
சரி வாங்க ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் பற்றி இப்போது நாம் படித்தறிவோம்.
ஆரஞ்சி பழம் ஃபேஷியல்:
ஆரஞ்சு பழத்தை 2 துண்டாக வெட்டி அந்த சாறை தினமும் முகத்தில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர முக அழகு பளப்பளப்பாகவும், இளமையுடனும் காணப்படும்.
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்
முகத்தில் முடி நீங்க:
சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.
முகத்தில் உள்ள முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, பின்பு காய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.
கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் முடிகள் போய் விடும்.
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் :
ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள்: இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் குணத்தை ஆரஞ்சுப் பழத்தோல் கொண்டுள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலின் சாற்றை தோலில் தடவிக் கொள்ளும் போது, தோல் பகுதி மென்மையாக மாறவும் மற்றும் கருப்பான கறைகள் மறையவும் கூடும்.
ஆரஞ்சுப் பழத்தோல்களை சருமத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பானதும் கூட. ஆரஞ்சுப் பழத்தோலை அதிக அழுத்தமில்லாமல் சருமத்தில் தடவுவதையும் மற்றும் எரிச்சலைத் தடுக்க ஆரஞ்சு பசையை பயன்படுத்துவதும் நல்லது.
சருமத்தை பளபளக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மென்மையாக மாற்றவும், இயற்கையாக அதன் துளைகளை சுத்தம் செய்யவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கவும் ஆரஞ்சுப் பழத்தோல் உதவும்.
எனவே சரும பாதுகாப்புக்கு இந்த ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவான அழகு குறிப்புகள்..!
உடல் எடை குறைய:
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாறை பிழிந்து அவற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.
மேனி பளப்பளக்க அழகு குறிப்புகள் :
Alagu kurippu :- தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து உடம்பில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து பயத்தமாவை தேய்த்து குளித்து வந்தால் மேனி பளப்பளப்பாகவும், சருமம் மிருதுவாகவும் இருக்கும்.
நகங்களை பராமரிக்க:
Alagu kurippu :- நகங்களை வெட்டுவதற்கு முன் நகத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால், நீங்கள் விரும்பும் வடிவத்திற்கு நகங்களை வெட்டலாம்.
உங்கள் விரல் நகம் சொல்லும் உங்களின் எதிர்காலம்
கூந்தலின் எண்ணெய் பசைக்கு அழகு குறிப்பு :
Alagu kurippu :- சிலருக்கு தலை முடி அதிக எண்ணெய் பசையாக இருக்கும். அதற்கு சிறந்த ஒன்றாக முட்டை தீர்வாகிறது.
ஆமாம் முட்டையில் கொஞ்சம் சர்க்கரை கலந்து தலையில் லேசாக தடவி பின்பு தலை தேய்த்து குளித்து வந்தால் சில நாட்களில் மாற்றங்கள் தெரியும்.
வறண்ட சருமத்திற்கு அழகு குறிப்பு :
Alagu kurippu :- சருமம் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் அப்போது முகத்தில் ஆலிவு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.
இதை தொடர்ந்து செய்து வர வேண்டும்.
மோரை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும் மற்றும் முகம் மென்மையாக இருக்கும்.
பளப்பளப்பான தலை முடிக்கு அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):
Alagu kurippu :- நாம் தினமும் தேனீர் தயாரிப்போம் அல்லவா அந்த தேனீரை வடிகட்டி பின்பு மிஞ்சும் தூளில் கொஞ்சம் எலுமிச்சை சாறை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், தலை முடி பளப்பளப்பாக இருக்கும்.
முகம் கருமையடையாமல் இருக்க அழகு குறிப்பு (Beauty tips in tamil):
Alagu kurippu :- வேப்பிலை, புதினா சிறிதளவு மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, அவற்றை தூள் செய்து பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் கருமை குணமாகும்.
ஆரஞ்சு பழ தோலை நன்கு காயவைத்து, பொடி செய்து பாலுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் கருமை நீங்கும்.
எண்ணெய் பசை முகத்திற்கு அழகு குறிப்பு (Beauty tips in tamil):
Alagu kurippu :- தக்காளி பழத்தை 2 துண்டு எடுத்து முகத்தில் தேய்த்து வர முக எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.
ஆப்பிள் பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கும்.
சருமம் அழகுபெற அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):
Alagu kurippu :- சருமம் அழகுபெற பால், கடலை மாவு, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளப்பளப்பாகவும் மாறும், குறிப்பாக சருமம் அழகுபெற பெரிதும் உதவும்.
பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய அழகு குறிப்பு (Beauty tips in tamil) :
Alagu kurippu :- பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய இரவு உறங்குவதற்கு முன் புதினா சாறு 2 தேய்க்கரண்டி, 1/2 மூடி எலுமிச்சை சாறு மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு ஐஸ் கட்டியால் ஓத்திடம் கொடுத்தால், பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையும்.
சருமம் மிருதுவாக அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) :
Alagu kurippu :- தினமும் சருமம் மிருதுவாக பழுத்த வாழை பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ சருமம் மிருதுவாக காணப்படும்.
சருமம் புத்துணர்ச்சி பெற அழகு குறிப்பு (Beauty tips in tamil):
Alagu kurippu :- தினமும் முகத்திற்கு தேங்காய் பாலுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் மிகவும் புத்துணர்ச்சி பெரும்.
உடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள் !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.