முகத்தில் தோன்றும் மருக்கள் நீங்க வீட்டு வைத்தியம் (Warts Removal Home Remedies)..! | மருக்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்
சிலருக்கு முகத்தில் மருக்கள் இருக்கும் அவற்றை பார்ப்பதற்கு மச்சம் போல் காணப்படும். இந்த மருக்கள் எந்த ஒரு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது என்றாலும் முக அழகை கெடுத்து விடும். பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வருகின்றது. இந்த மருக்கள் மறைய (maru neenga tamil) மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பரிந்துரைப்பது என்னெவென்றால் அந்த மருவை எரிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்.
இந்த கடினமான பரீட்சையை செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் இருக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை வைத்து, இந்த மருக்கள் நீக்குவது எப்படி (warts removal home remedies) அல்லது மரு உதிர வைப்பது எப்படி என்று இவற்றில் நாம் காண்போம்.
மருக்கள் மறைய வீட்டு மருத்துவம் (Warts Removal Home Remedies) | மரு நீங்க இயற்கை வைத்தியம் – Marukkal Poga Tips in Tamil:
மருக்கள் மறைய – இஞ்சி:
இந்த மருக்கள் நீங்க தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
மருக்கள் மறைய – அன்னாசி:
மருக்கள் நீங்க அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
Maru Neenga Tips in Tamil – வெங்காய சாறு:
மருக்கள் நீங்க வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும்.
வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
மருக்கள் மறைய – ஆப்பிள் சீடர் வினிகர்:
மரு உதிர ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டன் துணியில் நனைத்து மருக்கள் மீது தேய்த்து வர விரைவில் உதிர்ந்துவிடும்.
மருக்கள் மறைய – டீ ட்ரீ ஆயில்:
மரு உதிர இந்த முறையை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பின்பு இந்த டீ ட்ரீ ஆயிலை மரு மீது தடவ வேண்டும். இவற்றை தடவும்போது கொஞ்சம் எரிச்சல் மற்றும் வலி இருக்கும்.
இருந்தாலும் இந்த முறையை தினமும் மூன்று முறை தொடர்ந்து செய்துவர மரு எளிதில் உதிர்ந்து விடும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips
மருக்கள் மறைய – எலுமிச்சை சாறு:
மரு உதிர எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.
மருக்கள் மறைய – பூண்டு:
மரு உதிர பூண்டு சாற்றினை மரு இருக்கும் இடத்தில் தடவி ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
மேலும் இந்த முறையை தினமும் மூன்று முறை செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
மருக்கள் மறைய – மரு உதிர – கற்றாழை:
மரு வராமல் இருக்க அல்லது மரு உதிர கற்றாழை பெரிதும் உதவுகிறது. கற்றாழை மருக்களை போக்கும் தன்மை வாய்ந்தது.
எனவே தினமும் கற்றாழை ஜெல்லை மரு மீது தடவி வர மரு எளிதில் உதிர்ந்து விடும்.
மரு உதிர ஆளி விதை:
மரு வராமல் இருக்க ஆளி என்ற விதையை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி தினமும் மருவில் தடவிவர வேண்டும்.
அவ்வாறு தடவி வந்தால் மரு நாளடைவில் கொட்டிவிடும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் பேண்டேஜ் ஒட்டினால் மிக நல்லது.
மரு உதிர (Maru Neenga Tamil) சுண்ணாம்பு:
இந்த மரு வராமல் இருக்க சுண்ணாம்பை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.
Marukal Maraiya Tips – உருளைக்கிழங்கு:
மருக்கள் நீங்க உருளைக்கிழங்கினை மசித்து பசை போல் ஆக்கி தினமும் தடவி வர மரு பொரிந்துவிடும்.
அழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்!!!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |