அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்..!

அழகு குறிப்பு

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்..!

அழகு குறிப்பு – அழகை பாதுகாக்க கூடிய இரண்டு விதமான விட்டமின்கள் உள்ளன. ஒன்று கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் மற்றொன்று நீரில் கரைய கூடிய விட்டமின்கள் என இரண்டு வகை உள்ளன.

சருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் !!!

சரி வாங்க அழகை பாதுகாக்க கூடிய விட்டமின்கள் என்னென்ன உள்ளது என்று படித்தறிவோம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள்:

இந்த விட்டமின்கள் உடலில் சேமித்துவைக்கப்படுகின்றன, தேவைப்படும்போது அவை உபயோகப்படுத்தப்படுகிறது.

கொழுப்பில் கரையும் விட்டமின்கள் ஏ,டி ஈ, கே ஆகியவை இளமையாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்கிவிடும்.

நீரில் கரையக்கூடிய விட்டமின்கள்:

விட்டமின் பி காம்பளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலில் சேமித்து வைக்கமுடியாது. அதிகப்படியான சத்து வெளியேறிவிடும். இந்த வகை விட்டமின்கள் எவ்வாறு அழகை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

விட்டமின் பி1:

அழகு குறிப்பு (alagu kurippu) – விட்டமின் பி1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சுருக்கங்களை போக்குகிறது.

இந்த விட்டமின்கள் சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், சோயா பீன்ஸ், முந்திரி, ஓட்ஸ் போன்றவற்றில் இருக்கின்றது. எனவே இவ்வகை சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

விட்டமின் பி2:

அழகு குறிப்பு (alagu kurippu) – ரைபோஃப்ளேவின் அல்லது விட்டமின் பி2, உடலில் புதிய செல்களையும் திசுக்களையும் உற்பத்தி செய்கிறது. இதனால் செல் இறப்பு குறைவாகிறது. செல் இறப்புவிகிதம் குறைந்தால் இளமையாக சருமம் இருக்கும்.

இந்த விட்டமின்கள் அதிகளவு பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் இருக்கிறது.

ஆரஞ்சு பழத்தோல் அழகு குறிப்புகள் ..!

நியாசின் என்ற விட்டமின் பி3

அழகு குறிப்பு (alagu kurippu) – விட்டமின் பி3 வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் முறையாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன.

இந்த விட்டமின்கள் அதிகளவு மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் இருக்கின்றது.

விட்டமின் பி5:

அழகு குறிப்பு (alagu kurippu) – உடல் பருமனை குறைக்க விட்டமின் பி5 உணவுகளை உண்ணலாம்.

மேலும் அவை முகத்தில் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. புரோட்டினை அதிகரிக்க செய்கிறது.

இந்த விட்டமின்கள் அதிகளவு மக்காச்சோளம், முட்டை, சீஸ், தக்காளியில் இருக்கிறது.

பைரிடாக்சின் என்னும் விட்டமின் பி6:

அழகு குறிப்பு (alagu kurippu) – இந்த விட்டமின்கள் நிறைய ஆன்டிஆக்ஸிடென்டுகள் கொண்டவை.

நார்சத்துக்களும் கொண்டவை.

சருமத்தில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

சருமம் பொலிவாக இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.

இந்த விட்டமின்கள் முழு தானியங்கள், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் இந்த சத்துக்கள் உள்ளன.

பயோடின் என்ற விட்டமின் பி7:

அழகு குறிப்பு (alagu kurippu) – இவை கூந்தல் மற்றும் சரும செல்களை தூண்டும். நகங்கள் மற்றும் கூந்தல் வளர உதவும் விட்டமின் இது.

இந்த விட்டமின்கள் பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, சீஸ் போன்றவற்றில் இருக்கின்றது.

போலிக் அமிலம் என்ற விட்டமின் பி9:

அழகு குறிப்பு (alagu kurippu) – இரத்த சோகை மற்றும் இள நரையை தடுக்கும் விட்டமின் ஆகும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் விட்டமின் ஆகும்.

இந்த விட்டமின்கள் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

கோபாலமின் என்ற விட்டமின் பி12:

அழகு குறிப்பு (alagu kurippu) – செல்களை புதுப்பிக்கிறது. இளமையாக இருக்க இந்த விட்டமின் நன்மை செய்கிறது. சருமத்தை மெருகேற்றவும் செய்கிறது.

இந்த விட்டமின்கள் முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

விட்டமின் சி:

அழகு குறிப்பு (alagu kurippu) – விட்டமின் சி சுருக்கங்களை தடுக்கும். முகப்பரு, கருமை, ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை வெளியேற்றும். கண்களுக்கு அழகை தரும். இளமையாக இருக்கலாம். சருமத்தில் மினுமினுப்பாக இருக்கும்.

இந்த விட்டமின்கள் சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் நிறைந்து உள்ளது.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.