முகம் பளபளக்க- கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..!

Advertisement

கொத்தமல்லி அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil)..!

கொத்தமல்லி இயற்கையாகவே பல மருத்துவம் குணங்களை வாய்ந்தது, மேலும் உணவின் மனத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

இந்த கொத்தமல்லி இலையைக் கொண்டு முகம் மற்றும் தலைமுடியை பொலிவுடனும் மற்றும் மென்மையாக எப்படி வைத்துக்கொள்ளலாம் என்று சில அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil) சிலவற்றை இப்போது நாம் காண்போம் வாங்க..!

newபுருவம் அடர்த்தியாக வளர டிப்ஸ்..! Eyebrow Growth Tips in Tamil..! Puruvam Valara Tips in Tamil..!

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா?

உங்களுடைய முகம் மென்மையான மற்றும் பட்டுபோன்ற முகம் வேண்டுமா ?

அப்படி என்றால் 4 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பால், 2 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சாறு இவற்றை அனைத்தையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து பின்பு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.

இந்த முறையை தினமும் செய்து வர வேண்டும்…

முகப்பரு நீங்க – அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil) :

முகப்பரு நீங்க எளிய முறையில் நம் வீட்டில் அதிகம் பயன்ப்படுத்தும் கொத்தமல்லி தீர்வாகிறது. முகப்பரு தொல்லை இருந்தால் ஒரு கப் தண்ணீரில் கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் சிறிதளவு சீமைச்சாமந்தி பூ அல்லது எண்ணெய் மற்றும் கொஞ்சம் எலுமிச்சை சாறு இவற்றை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஒரு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகப்பரு குணமாகும்.

இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

கரும்புள்ளி மறைய – அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil):

முகத்தை சுற்றி ஒரே கரும்புள்ளியாக இருக்கிறதா? அதற்கு எளிதில் கிடைக்கும் கொத்தமல்லி தீர்வாகிறது.

தினமும் 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குணமாகும்.

newபேரழகியா மாறணுமா? அப்போ இந்தாங்க அழகு குறிப்புகள்..!Beauty Tips in Tamil..!

முகத்தில் சிவப்பு தடிப்புகள் குணமாக – அழகு குறிப்புகள் 1000 (Beauty Tips In Tamil):

முகத்தில் உள்ள சிவப்பு தடிப்புகள் குணமாக 2 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்படும் சிவப்பு தடிப்புகள் குணமாகும்.

தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்த – அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil):

வாரத்தில் இரண்டு முறை கொத்தமல்லி இலையை(kothamalli health benefits in tamil) அரைத்து தலையில் தேயித்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.

இதை தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு முழுமையாக தடுக்கப்பட்டு தலைமுடி அடர்த்தியாகவும், மிகவும் பொலிவுடனும் இருக்கும்.

உங்கள் உதடு மிகவும் கருப்பாக உள்ளதா? – இதோ அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil) :

அதற்கு தினமும் இரவில் தூங்கும் முன் கொத்தமல்லி இலை சாறு எடுத்து உதட்டில் தடவினால் உங்கள் உதடு மிகவும் பொலிவுடன் மற்றும் மென்மையாக காணப்படும். இதை தொடர்ந்து செய்து வரலாம்.

உங்கள் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமா? – இதோ அழகு குறிப்புகள் (Beauty Tips In Tamil):

  • சருமம் மென்மையாக கொத்தமல்லி இலை, தயிர் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை நன்றாக அரைத்த பின் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகம் மிகவும் மென்மையாகவும், பட்டு போன்றும் காணப்படும்.
  • தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்த்து நீரால் கழுவ வேண்டும். இவற்றை தொடர்ந்து  செய்து வர முகபரு மறையும்.
  • கேரட் மற்றும் பப்பாளி இரண்டையும் ஒன்றாக அரைத்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர உங்கள் முகம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.
  • உங்கள் தலைமுடியில் அதிகம் எண்ணெய் பசை இருந்தாலும் முகபரு ஏற்படும் எனவே வாரத்தில் இரண்டு முறை தலை தேய்த்து குளிப்பது மிகவும் அவசியம்.
newஅம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement