உங்கள் முகம் பளபளக்க டிப்ஸ்..!

முகம் பளபளக்க

இயற்கையான முறையில் முகம் பளபளக்க சில வழிகள்

இந்த ஃபேஸ் மாஸ்க்க நீங்க முகத்தில் போடும் போது நல்ல மாற்றங்கள் கிடைக்கும், அதாவது எண்ணெய் சருமம், வறண்ட சருமம், எரிச்சல் முகத்திற்கு, சுருக்கமான முகத்திற்கு, வெளிர்ந்த சருமத்திற்கு மற்றும் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த ஃபேஸ் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்திற்கு எந்த ஒரு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. இந்த ஃபேஸ் மாஸ்க் என்றும் முகம் பளபளக்க மற்றும் இளமையாகவும் வைத்துக்கொள்ளும்.

முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் !!!

சரி வாங்க இந்த ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது, தேவையான பொருட்கள் என்னென்ன மற்றும் எப்படி இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் பயன்படுத்துவது என்று இவற்றில் காண்போம்.

முகம் பளபளக்க டிப்ஸ் (Azhagu Kurippu)..!

முகம் பளபளக்க ஆயில் ஃபேஸ்:

சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்துக் கொண்டே இருக்கும், அதனால் அவர்களது முகத்தை பார்க்கும் போது மிகவும் டல்லாக தெரியும், இனி அந்த கவலை வேண்டாம் முகம் பளபளக்க இந்த ஃபேஸ் மாஸ்க் போடுங்க சரியாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

 • முட்டை
 • எலுமிச்சை சாறு

செய்முறை:

முகம் பளபளக்க டிப்ஸ் (azhagu kurippu):- முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்பு அவற்றில் எலுமிச்சை சாறை கலந்து கொள்ளவும், அவ்வளவுதான் ஃபேஸ் மாஸ்க் தயார்.

முகம் பளபளக்க ஆயில் ஃபேஸ் பயன்படுத்தும் முறை:

இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். இவ்வாறு செய்வதினால் ஆயில் ஃபேஸ் மறைந்து முகம் ஈரப்பதமாக காட்சியளிக்கும்.

அழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்

எரிச்சல் முகத்திற்கு:

முகம் பளபளக்க டிப்ஸ் (azhagu kurippu) :- உங்கள் முகம் மிகவும் எரிச்சலாகவும் மற்றும் அரிப்பாகவும் உள்ளதா? அப்படி என்றால் இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.

தேவையான பெருட்கள்:

 • முட்டை
 • தேன்
 • தயிர்
 • வெள்ளரிக்காய் சாறு

செய்முறை:

முதலில் 1/2 வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் அடித்து கொண்டு, அதில் சிறிது மிதமான சூட்டில் சூடு செய்த 1 டீஸ்பூன் தேனை கலக்கவும். 1/2 கப் தயிர் மற்றும் வெள்ளரி சாற்றை அதனுடன் கலந்து கொள்ளவும் அவ்வளவுதான் ஃபேஸ் மாஸ்க் தயார்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் உங்கள் எரிச்சல் கொண்ட முகத்தை மென்மையாக மாற்றும்.

Skin Whitening Tips in Tamil..!

சுருக்கமான முகத்திற்கு:

முகம் பளபளக்க டிப்ஸ் (azhagu kurippu) :- இளம் வயதிலேயே முகம் முழுவதும் சுருக்கமா? இதனால் நீங்கள் முதுமை தோற்றத்தில் காட்சியளிக்கிறீர்களா சரி இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

 • ஓட்ஸ்
 • தேன்
 • முட்டை

செய்முறை:

முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் ஓட்ஸை பவ்டராக்கி அதில் கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை 20 நிமிடம் முகத்தில் பூசி பிறகு காட்டன் துணியால் துடைத்துவிடவும். இவ்வாறு செய்தால் இழந்த இளமையான முகத்தை மீண்டும் பெற்றுவிடுவீர்கள்.

வெளிர்த்த முகத்திற்கு:

சிலருக்கு முகம் மிகவும் வெளிர்த்து காணப்படும். அதன் காரணம் முகத்தில் அதிகமா கெமிக்கல் கலந்த பொருட்களை முகத்தில் பயன்படுத்துவதுதான், எனவே அவர்களுக்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க் இதுதான்.

தேவையான பொருட்கள்:

 • முட்டை
 • பால்

செய்முறை:

முட்டையின் வெள்ளை கருவை நன்றாக அடித்து கொள்ளவும், அதனுடன் 1/4 கப் பால் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ கெமிக்களால் பாதிக்கப்பட்ட சருமம் குணமடைந்து வெண்மை பெறும்.

வறண்ட சருமத்திற்கு:

முகம் பளபளக்க (azhagu kurippu) பொதுவாக இந்த பிரச்சனை முகத்தில் ஈரத்தன்மை இல்லாததால் தான் ஏற்படுகிறது, எனவே அதற்கு இந்த ஃபேஸ் மாஸ்க் மிகவும் சிறந்ததாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

 • பால்
 • அவகோடோ பழம்
 • தேன்
 • முட்டை

செய்முறை:

1/4 கப் அவகோடோ பழத்தை நன்றாக சாறு போல் செய்து கொண்டு, அவற்றுடன் 1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து அடிக்கவும். அதன் பிறகு 1 டீஸ்பூன் பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து மிதமான சுடு நீரில் முகத்தை கழுவவும். வறண்ட சருமம் இப்போது மிகவும் அழகாக பொலிவுடன் மாறிவிடும்.

முகத்தை சுத்தம் செய்ய:

முகம் பளபளக்க (azhagu kurippu) சுற்று சூழல் காரணமாக பொதுவாக அனைவருக்குமே முகம் கருமையடைந்து மிகவும் அழுக்காக காணப்படும், எனவே அதற்கு இந்த ஃபேஸ் மாஸ்க் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இந்த ஃபேஸ் மாஸ்க் முகத்தை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்:

 • முட்டை
 • தயிர்

செய்முறை:

நன்றாக அடித்த வெள்ளை கருவை 2 டீஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்கை 2 வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து பளபளவென மின்னும்.

உடல் முழுவதிற்கும் தேவையான அழகு குறிப்புகள் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும் –> Pothunalam.com