முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க (Oily skin care tips at home in tamil)- அழகு குறிப்புகள் !!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால், அவற்றில் ஆயில் ஸ்கின் என்னும் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது.
ஏனென்றால், இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான்.
எனவே, எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
இந்த பகுதியில் ஆயில் சருமத்தை இயற்கை முறையில் பராமரிப்பது எப்படி என்று கூறப்பட்டுள்ளது.
வாருங்கள் இப்போது நாம் ஆயில் ஸ்கின் பிரச்சனையைப் போக்கும் சுலபமான சருமப் பராமரிப்பு முறைகளைப் பற்றி பார்ப்போம்…
பொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் !!!
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க
1. முகத்தில் எண்ணெய் பசை நீங்க – ஆயில் பேஸ்க்கு:
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) கடைந்த மோரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவ வேண்டும்.
பின்பு 15 நிமிடம் வரை காத்திருக்கவும், பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து விடும்.
2. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil)1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர எண்ணெய் பசை நீங்கும்.
3. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – பப்பாளி:
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும்.
இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.
4. முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க – முல்தானிமெட்டி:
mugathil ennai pasai neenga: முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) இயற்கை அளித்த ஒரு பரிசு என்னவென்றால் அது தான் முல்தானிமெட்டி. இதில் அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கி முகத்திற்கு நல்ல பொழிவைக் கொடுக்கும். எனவே, முல்தானிமெட்டியை பேஸ் மாஸ்க்காக போட்டு உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.
இந்தியர்களின் முகத்திற்கேற்ற SPL ஃபேஷியல்… வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
5. முகத்தில் எண்ணெய் பசை நீங்க – துளசி ஃபேஸ் மாஸ்க்:
எண்ணெய் சருமம் நீங்க:- முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க (oily skin care tips at home in tamil) துளசி, எண்ணெய் பசை சருமத்தினருக்கு மட்டுமின்றி, பருக்களைப் போக்கவும், இதர சரும பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவும்.
அதற்கு சிறிது துளசி இலைகளை எடுத்து, நீரில் கழுவி, அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
முகப்பரு மறைய:
1. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
2. வெந்தியகீரை ஒரு கைப்பிடி அளவு, துளசி சிறிதளவு,கொத்தமல்லியிலை சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் மறையும்.
3. வெள்ளரி 2 துண்டுகள், தக்காளி 2 துண்டுகள் மற்றும் கேரட் 2 துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அவற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் மறையும்.
புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா ?
சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக வளராமல் விட்டு விட்டு மெலிதாக வளர்ந்திருக்கும்.
இவர்கள் தேங்காய் பாலை காய்ச்சி எடுத்த எண்ணெயை புருவங்களின் மீது தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும் அல்லது சுத்தமான விளக்கெண்ணெய்யை தடவி வந்தாலும் புருவம் அடர்த்தியாக வளரும்.
சருமம் பளபளக்க:
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.
அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு மசாஜ் செய்த பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
வெள்ளரிச் சாறு, சந்தனப் பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை, கால்களுக்குத் தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாகும்.
ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக | 100% Natural Tips
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை செய்து வர முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க முடியும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |