சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

தலை முடி வளர டிப்ஸ் ..!

தலை முடி வளர டிப்ஸ் :- ஆண்களே உங்களுக்கு தலை முடி உதிர்ந்து இதன் காரணமாக தலையில் சொட்டை விழுகிறதா இனி கவலை வேண்டாம். அதற்கு நீங்கள் சில முறைகளை பின்பற்றினாலே இந்த பிரச்சனையில் இருந்து விலகி விடலாம். அதாவது தினமும் நீங்கள் சிறந்த முறையில் உணவு பழக்கங்களையும், நிம்மதியான உறக்கமும் மற்றும் மன அமைதியும் இருந்தாலே போதும் இந்த பிரச்சனையில் இருந்து விலகி விடலாம்.

உங்கள் முகம் பளபளக்க டிப்ஸ்..!

 

சொட்டை விழுந்த இடத்தி முடி வளர என்னென்ன டிப்ஸ் உள்ளது என்று இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..!

தலை முடி உதிர்வதன் காரணம்:

தலை முடி வளர டிப்ஸ் : கால மாற்றங்கள், சரியான உணவு பழக்கம் இல்லாமை, ஹார்மோன் பிரச்சனைகள், பரம்பரை ரீதியாக, இரும்பு சத்து குறைபாடு போன்றவையே மூல காரணங்களாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக சில மூலிகைகள் இருக்கிறது.

சரி வாங்க அந்த மூலிகையை பற்றி இந்த கட்டுரையில் சிலவற்றை பார்ப்போம்.

newBeauty tips in tamil

சொட்டை தலையில் முடி வளர – ஆமணக்கு எண்ணெய் :

தலை முடி வளர டிப்ஸ்(Mudi Valara):1 வழுக்கை தலைக்கு சிறந்த ஒன்றாக ஆமணக்கு மூலிகை எண்ணெய் விளங்குகிறது.

இதன் மருத்துவ குணத்தால் தலை முடி வேர் பகுதியை தூண்டி, தலை முடி நன்கு வளர செய்வதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வேர்பகுதியை உறுதிப்படுத்துகிறது.

மேலும் பொடுகு பிரச்சனையை குணப்படுத்துகிறது.

ஆமணக்கு எண்ணெயை கொஞ்சம் சூடுபடுத்தி, இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து விட்டு தூங்கவும்.

இந்த முறை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி முளைத்து வரும்.

வழுக்கையில் முடி வளர – கற்றாழை:

தலை முடி வளர டிப்ஸ் (Mudi Valara):2 கற்றாழை பொதுவாக தலை முடி சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஒரு சிறந்த அரும்மருந்தாகும்.

எனவே வாரத்தில் இரு முறை இந்த கற்றாழையை தலைக்கு தேய்த்து குளிப்பதினால் பொடுகு மற்றும் வறட்சியின் காரணமாக முடி உதிர்தல் போன்றவை குணமாகும்.

வழுக்கை விழுந்த இடத்தில் இந்த கற்றாழையை 15 நிமிடம் மசாஜ் செய்தால் தலை முடி வேர்களுக்கு மறுபிறப்பு கொடுக்கும்.

சொட்டை தலையில் முடி வளர – இஞ்சி:

தலை முடி வளர டிப்ஸ்(Mudi Valara):3 இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து சொட்டை விழுந்த இடத்தில் தடவும்.

இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

வழுக்கையில் முடி வளர – ரோஸ்மேரி :

தலை முடி வளர டிப்ஸ்(Mudi Valara):4 இந்த மூலிகை தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாகிறது.

எனவே இந்த ரோஸ்மேரியை அரைத்து தலை தேய்த்து குளிப்பதினால் தலைமுடி உதிர்வு பிரச்சனை குணமாகிறது.

மேலும் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி வளரும் மற்றும் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வாகிறது.

முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் !!!

சொட்டை தலையில் முடி வளர – வெந்தயம்:

தலை முடி வளர டிப்ஸ் (Mudi Valara):5 வெந்தயம் என்றாலே குளிர்ச்சி தன்மை உடையது.

எனவே உடல் உஷ்ணத்தால் முடி உதிர்வதை கட்டுப்படுத்த இந்த வெந்தயம் மிகவும் உதவுகிறது என்பதால், வாரத்தில் ஒரு முறை வெந்திய பொடியை 3 ஸ்பூன் எடுத்து கொண்டு பாலில் கலந்து தலை தேய்த்து குளித்தால் சொட்டை விழுந்த இடம் மறைந்து போகும்.

வழுக்கையில் முடி வளர – கரிசலாங்கண்ணி:

தலை முடி வளர டிப்ஸ் (Mudi Valara):6 இவற்றில் உள்ள மருத்துவ குணத்தால் தலையில் வழுக்கை விழாமல் தலை முடியை பாதுகாக்கிறது.

உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது.

உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

மேலும் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடியை கொடுக்கும். முடியை மிக மென்மையாக வைக்க இதன் பவ்டரை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தடவுங்கள்.

சொட்டை தலையில் முடி வளர – துளசி:

தலை முடி வளர டிப்ஸ் (Mudi Valara):7 இந்த மூலிகை மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது என்று அனைவருக்குமே தெரியும்.

உதிர்ந்த முடிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கிறது, தலை முடிக்கு அதிக ஈரப்பதத்தை அளித்து தலை முடி வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

துளசி இலைகளை வெயிலில் காயவைத்து பிறகு பொடி செய்து ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும்.

இதனை 20 நிமிடம் தலையில் தேய்த்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் வழுக்கை இருந்த இடத்தில் முடிகள் வளரும்.

வழுக்கையில் முடி வளர – செம்பருத்தி:

தலை முடி வளர டிப்ஸ் (Mudi Valara):8 இது எளிதாக அனைவருக்குமே கிடைக்க கூடிய ஒரு மூலிகை, இதனை தலைக்கு தேய்த்து குளித்தால் உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்யும் தன்மை இதற்கு இருக்கிறது.

இவற்றை நாம் அரைத்து குளித்தாலும் அதிக நன்மை கிடைக்கும் அல்லது காயவைத்து போடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலை தேய்த்து குளிப்பதினாலும் அதிக நன்மை கிடைக்கும்.

உடல் முழுவதிற்கும் தேவையான அழகு குறிப்புகள் !!!

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!