வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மஞ்சள் பல் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்?

Updated On: September 25, 2025 5:57 PM
Follow Us:
பற்கள் பராமரிப்பு
---Advertisement---
Advertisement

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்| பல் பளபளக்க 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக என்ன செய்வது? ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள்.சரி வாங்க பற்களில் ஏற்படும் மஞ்சள் கறை நீக்குவதற்கு என்னென்ன வழிகள் (teeth problems solutions in tamil) இருக்கின்றன என்று இவற்றில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்–>சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் – Parkal venmaiya avathatkana vazhikal

பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்:

  • பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே.
  • பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளையாக இருக்கும்.
  • பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று இப்போது நாம் படித்தறிவோம்.
  • தினமும் இரண்டுமுறை பல் துலக்குவது அவசியமாக இருக்கிறது.

கொய்யா இலை:

  • தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். நன்றாக மென்றபின் அவற்றை துப்பிவிட வேண்டும்.
  • இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை செய்து வர பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். நீங்கி பல் வெள்ளையாக மாறும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து செய்துவரவேண்டும்.

கற்றாழை: 

  • கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பல் வெள்ளையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.

வெள்ளை வினிகர்: 2

  • டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பல் வெள்ளையாக மாறும்.

பேக்கிங் சோடா:

  • பேக்கிங் சோடா பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் உதவியாக இருக்கிறது.
  • இந்த பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு, 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து கொண்டு தினமும் மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். பல் வெள்ளையாக மாறும்.
இதையும் படியுங்கள்–> குழந்தைபால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

எலுமிச்சை:

எலுமிச்சை சாற்றில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பற்களில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சை தோலைக் கொண்டு பற்களில் தேய்த்து பின்பு குளிர்ந்த நீரில் வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும், பல் வெள்ளையாக மாறும்.

ஆப்பிள்: 

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

உப்பு:

  • உப்பை கொண்டு தினமும் பற்களை தேய்த்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
  • அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், உப்பு ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.
பல் ஈறு பலம் பெற

 அடுப்பு சாம்பல்:

  • தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது அடுப்பு சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையாகும்.
  • அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.

ஆரஞ்சு தோல்:

  • இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
  • இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

கேரட்:

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

ஸ்ட்ராபெர்ரி :

தினமும் ஒரு ஸ்ட்ராபெர்ரி  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைவதுடன், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

பற்கள் இடைவெளி குறைய:

பற்கள் இடைவெளி குறைய:- கிளிப் அணிவது சிறந்த வழி. இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. “கிளிப்’ அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன. அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, “செட்’ வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!