Beetroot face pack tamil
பீட்ரூட்டை இதுவரை நாம் சமைப்பதற்கு தான் அதிகமாக பயன்படுத்தியுள்ளோம். இப்போது நாம் முகம் அழகு பெறவும் பயன்படுத்த போகிறோம். ஆம் நீங்கள் படிப்பது உண்மைதான். பீட்ரூட்டை ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) தயார் செய்து நாம் முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மையை பற்றி நாம் இங்கு காண்போம்.
பொதுவாக இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் சருமத்தில் அதிகம் அழுக்கு சேர்வதன் மூலம் முகத்தில் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவது .
இந்த பிரச்சனையை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம் என்றால் இளம் வயதிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி, பின்பு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முகத்தின் அழகு கெடுத்துவிடும். எனவே இந்த பிரச்சனையை குணப்படுத்த பீட்ரூட் நமக்கு அதிகமாக உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..!
சரி இப்போது பீட்ருட் அழகு குறிப்புகள் (beetroot face pack tamil) சிலவற்றை நாம் காண்போம் வாங்க..!
பீட்ரூட் ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை (Beetroot Face Pack Tamil):

தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
- முதலில் கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு அவற்றில் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் பீட்ருட் சாறு (beetroot juice benefits for skin in tamil) ஆகியவற்றை பேஸ்டு பதம் வரும் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
- இதை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- பின்பு பிரஷ்ஷின் உதவியுடன் முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
- எப்போதும் முகத்தில் அப்ளை செய்யும் போது கீழ் இருந்து மேலாக அப்ளை செய்ய வேண்டும்.
சரி வாங்க பீட்ரூட் அழகு குறிப்புகள் பற்றி இப்போது நாம் காண்போம்..!
குறிப்பு 1:
பொதுவாக முகத்திற்கு மட்டும் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) அப்ளை செய்ய கூடாது, முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கும் சேர்த்து அப்ளை செய்ய வேண்டும்.
முகத்திற்கு மட்டும் நாம் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) அப்ளை செய்தோம் என்றால், முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருக்கும். ஃபேஸ் பேக் அப்ளை செய்யும் போது கழுத்து பகுதியை சேர்த்து அப்ளை செய்ய வேண்டும்.
கொத்தமல்லி அழகு குறிப்புகள் ..!
குறிப்பு 2:
இதை பயன்படுத்தியதும் நம் முகத்திற்கு குளிர்ச்சி தன்மையை தரும். அதனுடன் முகத்தில் இருக்கும் அழுக்கு அனைத்தும் நீங்கிவிடும். இதற்கு என்ன காரணம்?
என்னவென்றால் பீட்ரூட்டில் இருக்கும் ஃபாலிக் அமிலம் மற்றும் விட்டமின்கள் தான்.
இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை அதிகளவு கொடுக்கிறது மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது. எனவே இதனை வாரம் இரு முறை என்று இரண்டு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
குறிப்பு 3:
எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு பரு மற்றும் கரும்புள்ளிகள் தொல்லை அதிகம் வரும். அவர்களுக்கான பீட்ரூட் அழகு குறிப்புகள் அதாவது பீட்ரூட் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) மிகச் சிறந்த தீர்வாக விளங்குகிறது. எனவே தினமும் பீட்ருட் ஃபேஸ் பேக் முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் முகம் பொலிவுடன் காணப்படும்.
ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) போடுவது மட்டுமின்றி தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கு வெள்ளரி மற்றும் கேரட்டையும் சேர்த்து ஒன்றாக அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.
குறிப்பு 4:
இதை முகத்தில் அப்ளை செய்வதனால் முகத்தில் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகத்தில் இரத்த ஓட்டத்தை சீர் செய்து, முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்கிறது.
கடைகளில் கிடைக்கும் சில ஃபேஸ் கீரிமை வாங்கி நாம் முகத்தில் அப்ளை செய்வோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் நம் முகத்தின் அழகை பாதித்துவிடும். எனவே இயற்கையான முறையில் தயார் செய்த பீட்ரூட் ஃபேஸ் பேக்கை (beetroot face pack tamil) பயன்படுத்தவும்.
குறிப்பு 5:
முகம் வறட்சி அடைவதன் காரணமாக முகம் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகள் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை ஒன்று தான்.
அவை என்னவென்றால் தினமும் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் தினமும் தண்ணீர் அதிகம் குடிப்பதனால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.
எனவே தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு 6:
இன்றைக்கு அனைவரின் கவலையாக இருப்பது கண்களை சுற்றி கருப்பாக கருவளையம் இருப்பது தான். இதற்கு சிறந்த தீர்வாக பீட்ரூட் ஃபேஸ் பேக் (beetroot face pack tamil) விளங்குகிறது.
அதுமட்டுமின்றி முகத்தில் இரத்த ஓட்டத்தை சீர் செய்வதால், கண்களில் இருக்கும் கருவளையத்தை நீக்கிவிடுகிறது. அதனுடன் முகத்தில் இருக்கும் கருத்திட்டுகளும் குணமாகும்.
குறிப்பு 7:
பொதுவாக அனைவருக்கும் 30 வயது வந்து விட்டாலே முகத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
எனவே வாரம் இரு முறை முகத்திற்கு பீட்ரூட் ஃபேஸ் (beetroot face pack tamil) பேக் அப்ளை செய்வதனால் முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கலாம்.
இந்த 5 செய்முறை: முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக ..!
சரிங்க மேல் கூறப்பட்டுள்ள பீட்ரூட் அழகு குறிப்புகள் (beetroot face pack tamil) ஏதேனும் ஒன்றை தினமும் செய்து வர முகம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














