தலையில் பேன் ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்

Advertisement

பாட்டி வைத்தியம் பேன் தொல்லை நீங்க – Pen Thollai Neenga Tips

பொதுவாக தலையில் அதிகம் பேன் வைத்திருப்பவர்களின் கைகள் எப்பொழுதுமே தலையில் இதான் இருக்கும். இவ்வாறு அனைத்து நேரமும் தலையில் பேன் இருந்தால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள். வீட்டில் ஒருவருக்கு பேன் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே மிக வேகமாக பரவி விடுகிறது. பெரும் பாலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கே இந்த பெண் தொல்லை அதிகமாக இருக்கும். இது பெரிய மருத்துவப் பிரச்சனையல்ல. தலையில் பேன் இருப்பதால் ஒருவர் சுத்தமற்றவர் என்றோ, சுகாதாரம் இல்லாதவர் என்றோ அர்த்தமில்லை. சரி இந்த பேன் தொல்லைக்கு தீர்வு அளிக்கி வகையில் இங்கு சில பாட்டி வைத்திய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

பேன் தொல்லைக்கு தீர்வு..! Pen Thollai Neenga..!

சீத்தாப்பழ விதை:

சீத்தாப்பழ விதை

நாட்டு பழம் வகைகளில் ஒன்று தான் சீத்தாப்பழம். இந்த பழத்திலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில் உள்ள விதையை பயன்படுத்தி பேன் தொல்லைக்கு தீர்வு பெற முடியும். அதாவது சீத்தாப்பழ விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து சிறிதளவு எடுத்துச் சீயக்காயில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்துவந்தால் ஈறு, பேன் தொல்லை குறையும்.

வேப்பிலை மற்றும் துளசி:

வேப்பிலை பாக்டீரியாக்களை ஒழிக்கும் வல்லமை கொண்டது. துளசி குளுமைத் தன்மை அளித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை தலை முடியின் வேர்களில் படும்படி தேய்த்து, காய்ந்ததும் தலைக்குக் குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை குறைய ஆரம்பிக்கும்.

வசம்பு:

வசம்பு வாசனை பொருள் இதன் காரணமாக சமையலில் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. வசம்பைத் தண்ணீர்விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு, தண்ணீரில் தலை முடியை நன்றாக அலசினால் பேன் தொல்லை குறையும்.

தலையில் பேன் ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ் – துளசி இலை:

துளசி இலையை நன்றாக மையாக அரைத்து, தலையில் தடவிச் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையைக் கழுவினால், பேன்கள் செத்து உதிர்ந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

வேப்பம்பூ:

வேப்பம்பூ

உப்பு கலக்காத 50 கிராம் வேப்பம்பூவை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெயைத் தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பேன் தொல்லை குறையும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம்:

கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும். கற்பூரத்தில் இருக்கும் ஆண்டி – பாராசிடிக் என்ற வேதிப்பொருள் பேன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

வால் மிளகு:

வாழ் மிளகு மிகவும் மருத்துவம் வாய்ந்த பொருளாகும். இது குறிப்பாக பெண் தொல்லைக்கு சிறந்த மருந்தாகும். வால் மிளகை ஊறவைத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க, பேன் தொல்லை குறையும்.

உப்பு மற்றும் வினிகர்:

உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை இருக்காது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement