சந்தனம் அழகு குறிப்பு..! | சந்தனம் முகத்திற்கு
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் கவலை முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் சிலரின் முகங்கள் வறண்டும் மற்றும் முகத்தில் சிறு வெடிப்புகளும் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் முகத்தில் வலியை கொடுக்கும். அதிக குளிர் மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், தூக்கம் இன்மை, சுற்றுச்சூழல் மாசு, புகை பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், முகத்தில் அதிகம் மேக்கப் போடுவது என்று பல காரணகளினால் முகம் வறண்டு போகவும் மற்றும் வெடிப்புகள் தோன்றவும் வழி வகுக்கிறது.
சரி இந்த சரும பிரச்சனையை சரி செய்ய இந்த பகுதியில் சந்தனம் அழகு குறிப்புகள் பல உள்ளன அவைகளை சருமத்தில் பயன்படுத்தினாலே போதும் சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..! |
சரும பாதுகாப்புக்கு சந்தனம் அழகு குறிப்பு :
- நாம் முகம் அழகு பெறுவதற்காக சில ஃபேஸ் பேக் கீரிமை சூப்பர் மார்கெட்களிலும், ஆன்லைனிலும் வாங்கி முகத்தில் அப்ளை செய்வோம்.
- இதன் காரணமாககூட முக பொலிவை நீங்கள் இழக்க நேரலாம். எனவே நம் முகத்தை இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் சந்தனம் மற்றும் தயிரை கொண்டு எளிதாக அழகு பெறலாம்.
சந்தனம் அழகு குறிப்பு :
- சந்தனம் (sandalwood uses) பொதுவாக மருத்துவக் குணம் கொண்டது. மிகவும் வாசனையாகவும் இருக்கும், மேலும் இது அதிக குளிர்ச்சி வாய்ந்தது. இதை நாம் முகத்தில் அப்ளை செய்தால் முகம் வறட்சி தன்மையை குணப்படுத்துகிறது.
- மேலும் முகத்திற்கு அதிகம் ஈரப்பதத்தை அளிக்கின்றது. சந்தனம் (sandalwood uses) முகத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைக்கும் சிறந்த ஃபேஸ் பேக்காக சந்தனம் விளங்குகிறது.
சந்தன பவுடர்:
- சந்தன பொடியை முகத்தில் அப்ளை செய்வதனால் முகதளர்வுகள், முகத்தின் ஈரப்பதம் மற்றும் நிறம் மேம்படுத்தப்படுகிறது.
- வறட்சியின் காரணமாக முகத்தில் அரிப்பு மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.
- சந்தன பொடி சருமத்தின் சுருக்கங்களை இறுக்கமாக்குகிறது.
- முகத்தில் தோன்றும் தொற்றுகள் மற்றும் அரிப்புகளை சந்தனப் பொடி குணப்படுத்துகிறது.
- மேலும் புத்துணர்வையும், குழந்தையின் தோல் போன்று மென்மையான சருமத்தையும் தரும் ஆற்றல் சந்தனத்திற்கு உண்டு.
தயிர்:
- தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.
- தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.
- தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தை(சந்தனம் அழகு குறிப்பு) அளிக்கிறது.
சந்தனம் மற்றும் தயிர் கலந்த ஃபேஸ் பேக்:
- சந்தனம் (sandalwood uses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.
- பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.
சந்தனம் அழகு குறிப்பு 1:
- சந்தனப் (sandalwood uses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
- இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.
சந்தனம் அழகு குறிப்பு 2:
- சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.
- அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சந்தனம் அழகு குறிப்பு 3:
பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
சந்தனம் அழகு குறிப்பு 4:
சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.
சந்தனம் அழகு குறிப்பு 5:
சந்தனப் பொடியில் (sandalwood uses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |