பொடுகு தொல்லை நீங்க டிப்ஸ்..!
வணக்கம் இனிமையான நண்பர்களே… இன்றைய பதிவில் பொடுகு தொல்லையை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பொடுகு பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே காணப்படுகிறது.
தலை வறட்சியாக இருந்தாலோ, அல்லது தலையில் பூஞ்சை தொற்று இருந்தாலோ இந்த பொடுகு காணப்படுகிறது. இதனால் உங்கள் முடிக்கு பல சேதங்கள் ஏற்படுகிறது. இந்த பொடுகு பிரச்சனையில் இருந்து முடியை எப்படி பராமரிப்பது என்று தானே யோசிக்கிறீர்கள்..? இந்த பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் பாருங்கள் 👉 100% பொடுகு நீங்க எளிய வழிகள்
பொடுகை விரட்ட டிப்ஸ்:
பொடுகு தொல்லை இருந்தால் தலையில் அரிப்பு, முடி கொட்டுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் தலையில் பொடுகு இருந்தால் முகத்தில் பருக்கள் வரக்கூட வாய்ப்பு இருக்கிறது.
இதை எப்படி சரி செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகு தொல்லையை சரி செய்ய சில டிப்ஸ் உங்களுக்காக..!
டிப்ஸ் -1
ஒரு கிண்ணத்தில் 2 எலுமிச்சை பழச்சாறு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். அதை உங்கள் தலையில் முடியின் அடிப்பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.
ஒரு 20 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இதுபோல செய்து வந்தால் பொடுகு பிரச்சனை தீர்ந்து விடும்.
டிப்ஸ் -2
2 கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் சூடான நீரில் வேப்பிலையை ஊறவைக்க வேண்டும்.
பின் வேப்பிலை ஊற வைத்த நீரை கொண்டு உங்கள் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் பொடுகு தொல்லையை விரட்டலாம்.
டிப்ஸ் -3
பூண்டு பூஞ்சையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. அதனால் 5 பூண்டு பற்கள் எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக மசித்து தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள்.
அந்த நீரை குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் அடிப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு 20 நிமிடம் சென்ற பின் உங்கள் தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்து வருவதால் பொடுகு தொல்லை நீங்கும். அதுமட்டுமில்லாமல் முடியின் சொரசொரப்பு தன்மையும் நீங்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |