முகப்பரு நீங்க பாட்டி வைத்தியம் ..!
பாட்டி வைத்தியம் முகப்பரு: தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதற்கான வீட்டு மருத்துவம் என்ன என்று தெளிவாக நாம் காண்போம்.
சரி பருக்கள் வந்தால் அனைவரும் என்ன செய்வோம்? அதனை சரிசெய்ய என்ன வழி என்று யோசித்து, அதனை சரிசெய்ய முயற்சிபோம். ஆனால் யாராவது அது எதற்காக வருகின்றது என்று யோசித்ததுண்டா? அப்படி யோசித்தால், நிச்சயம் பருக்கள் வருவதையே நாம் அடியோடு தடுக்கலாம்.
இதையும் படியுங்கள்–> | அட எலுமிச்சை தோலில் மறைந்துள்ள பயன்கள் பற்றி தெரியுமா? |
முகப்பரு வர காரணம்:
முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் கூட பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.
பரு தானாகவே பழுக்கும் வரை விட்டால் முழுமையாக பழுத்தும் காய்ந்து, அதன் மேல் படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் அகன்றுவிடும், வடுக்களும் இல்லாமல் மறைந்து விடும்.
சரி வாங்க முகப்பருக்களை(முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி மறைய) போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி இவற்றில் காண்போம்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – எலுமிச்சை சாறு:
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய பெரிதும் உதவுகிறது. எனவே எலுமிச்சை சாறை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – வைட்டமின் ஈ எண்ணெய்:
வைட்டமின் ஈ எண்ணெய்யில் இயற்கையாகவே உள்ள எதிர் ஆக்சிஜனேற்றிகள் கரும்புள்ளிகளை நீக்குவதுடன் தோலின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
முகப்பரு கரும்புள்ளி நீங்க – ஃபேஸ் பேக்:
முகப்பருவினால் ஏற்படும் கரும்புள்ளிகளுக்கு இந்த ஃபேஸ்பேக் போட்டால் சரியாகும்.
சந்தன பவுடர், கிளிசரின், தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல செய்யவும். இந்த பேக்கை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – வெங்காயம் மற்றும் பூண்டு சாறு:
வெங்காயம் மற்றும் பூண்டு சாறை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, நறுமணம் போகும் வரை சுத்தமாக கழுவவும்.
இந்த முறை கரும்புள்ளிகளுக்கு சிறந்த தீர்வாகும். இந்தமுறையை பயன்படுத்திவர விரைவில் சிறந்த மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
இதையும் படியுங்கள்–> | முகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..! |
முகப்பரு நீங்க டிப்ஸ் – தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் கரும்புள்ளிகளை நீக்கும் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து முகத்தில் தடவிவர கரும்புள்ளிகள் வராமல் தடுக்குகிறது.
முகப்பரு நீங்க டிப்ஸ் – ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம்:
இந்த இரண்டையும் கலந்து கொண்டு இரவில் தூங்குவதற்கு முன் முகத்தில் போட்டுகொண்டு இரவு முழுவதும் வைத்துக்கொள்ளவும். பின்பு மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பின்பு முகத்தின் வேறுபாட்டை கவனிக்க வேண்டும்.
ரோஜா நீர் தோலிற்கு ஊட்டமளித்து, தேவையற்ற பாக்டீரியாவை கொல்லுகிறது. இதனால் தோல் வீக்கம் குறையும், தோலிற்கும் குளிர்ச்சியான பண்புகளை வழங்கும்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – வெந்தயம்:
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குணப்படுத்த வெந்தயம் மிகவும் உதவுகிறது. கொதிக்கும் தண்ணீரில் 1 தேக்கரண்டி வெந்தியத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அந்த வெந்தியத்தை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்து கொண்டு, பின்பு மறுநாள் காலை வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – புதினா:
புதினா இலை சாறினை எடுத்துக்கொண்டு முகப்பருக்கள் உள்ள இடத்தில் தினசரி போட்டுவந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் பிரச்சனை குணமாகும்.
இந்த முறையை தொடர்ந்து செய்துவர வேண்டும்.
முகப்பரு நீங்க டிப்ஸ் – காய்கறிகள், பழங்கள் மற்றும் தண்ணீர்:
தினமும் நிறையை காய்கறிகள், பழங்கள் மற்றும் தண்ணீர் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் முகம் வறட்சியடையாமல் முகம் பொலிவுடன் காணப்படும்.
மேலும் தினமும் அதிக தண்ணீர் குடிப்பதினால் உடலின் உள்ளுறுப்புகள் சுத்தமாகும்.
உடலில் சரியான அளவு நீர் சத்து இருந்தால் உங்களது சருமம் என்றும் பளபளப்பாக இருக்கும்.
இந்த முறையை நீங்களும் பயன்படுத்தி மற்றவர்களையும் பயனடைய சொல்லலாம்.
உதிர்ந்த முடி வளர வெங்காயம் சாறு உதவுகிறது |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |