முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்..! Mugaparu Thalumbu Maraiya Tips..!

Advertisement

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்..!Mugaparu Thalumbu Maraiya Tips..!

முகபரு மறைய டிப்ஸ் / mugaparu thalumbu maraiya tamil: நாம் முகப்பரு நீங்க சில எளிய வீட்டு மருத்துவம் ஏற்கனவே பகுதி – 1ல் பார்த்தோம். இது அந்த தொடரின் பகுதி – 2 ஆகும். பகுதி – 1 ஜ படிக்க கீழே கிளிக் செய்யவும்.

முகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம் – பகுதி – 1

முகப்பரு நீங்க (mugaparu thalumbu maraiya tamil) இயற்கை மருத்துவம் – உருளை கிழங்கு:-

முகப்பரு நீங்க (Mugaparu Thalumbu Maraiya Tips) உருளைக்கிழங்கு இப்போது முக பருக்களுக்கு நல்ல தீர்வையும், முகத்திற்கு அழகு சேர்ப்பதற்காக சில அதிசய வேலைகளையும் செய்கிறது.

முகப்பரு போக ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் தேய்க்கலாம் அல்லது அவற்றின் சாறை கூட முகத்தில் தடவலாம்.

உருளைக்கிழங்கை நன்கு பேஸ்டு போல் அரைத்து கொண்டு முகத்தில் தடவி சிறிது நேரம் காத்திருக்கவும். பின்பு சூடான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும். இந்த முறையை 2 வரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் – மஞ்சள் மற்றும் புதினா:-

முகப்பரு நீங்க (mugaparu maraiya tips) மஞ்சள் தூள் மற்றும் புதினா இலை சாறு இரண்டையும் கலந்து பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மீது தடவி 20 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இந்த முறையை தினமும் செய்யலாம். முகத்தில் இருக்கும் முகப்பரு குறைய ஆரம்பிக்கும் மற்றும் முகப்பருவினால் (mugaparu maraiya tips) ஏற்பட்ட காயங்கள் குணமாகும்.

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம் – பேக்கிங் சோடா:-

முகப்பரு நீங்க (mugaparu maraiya tips) பேக்கிங் சோடாவில் கொஞ்சம் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் செய்து முகவெட்டுக்களில் தடவி 4 நிமிடம் வரை காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர முகவெட்டுக்கள் குணமாகும். மேலும் முகப்பரு தழும்புகள் நீங்க (mugaparu thalumbu maraiya tips)ஆரம்பிக்கும்.

ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!

முகம் பளபளவென்று மின்ன:-

முகத்தில் தழும்புகள் (mugaparu thalumbu maraiya tips) அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் மேலும் முகப்பரு தழும்புகள் நீங்க ஆரம்பிக்கும், முகம் பளபளப்பாக மாறி பொலிவு பெறும்.

முகம் அழகு பெற:-

அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.

வறட்சி அடைந்த சருமத்திற்கு:-

உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.

முகத்தை பராமரிக்க சில அழகு குறிப்புகள் :

முகப்பரு நீங்க டிப்ஸ் 1:-

துத்தி இலையை அரைத்து முகத்தில் தடவிவர (mugaparu maraiya tips) முகப்பருக்கள் குணமாகும்.

முகப்பரு நீங்க டிப்ஸ் 2:-

நன்னாரி வேரின் கஷாயத்தால் கூட முகப்பரு பிரச்சனை குணமாகும்.

முகப்பரு நீங்க டிப்ஸ் 3:-

வெட்டி வேர் 100 கிராம், சந்தன தூள் 25 கிராம் ஆகியவற்றை பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் கலந்து முகத்தில் தடவிவர முகப்பருக்கள் (mugaparu maraiya tips) மற்றும் சூட்டு கட்டிகள் குணமாகும்.

முகப்பரு நீங்க டிப்ஸ் 4:-

பாசி பருப்பு மாவுடன், நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை தண்ணீர் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் தினமும் தடவிவர முகப்பருக்கள் மறையும்.

முகப்பரு வராமல் தடுக்க 5:-

சந்தனம், ஜாதிக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை அரைத்து போட்டு வர பருக்களினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும் (mugaparu thalumbu maraiya tips).

முகப்பரு வராமல் தடுக்க 6:-

கொத்தமல்லி இலை சாறுடன் சிறிதளவு லவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தினமும் இருவேளை தடவி வர முகம் பொலிவு (mugaparu maraiya tips) பெறும் மற்றும் முகப்பருக்கள் தொல்லை குணமாகும்.

முகப்பரு வராமல் தடுக்க 7:-

தேங்காய் பாலில் ஜாதிக்காயை அரைத்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக முகத்தில் தடவ வேண்டும்.

காலையில் எழுந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தழும்பும் (mugaparu thalumbu maraiya tips), கரும்புள்ளியும் மறைந்துவிடும்.

முகப்பரு வராமல் தடுக்க 8:-

ஒரு கைப்பிடி அளவு துளசி இலையுடன், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக குழைத்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்தவுடன் முகத்தை கழுவவும்.

துளசி முகத்தின் பொலிவை அதிகரிக்கவும், மஞ்சள் சருமத்தை பளிச்சென்று காட்டவும் பயன்படுகிறது.

உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement