வாழைப்பழ தோல் போதுமே! ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு!

Advertisement

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும் தெரியுமா.

முக அழகு குறிப்புகள்: பொதுவாக நாம் அனைவருமே வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தோலை தூக்கி வீசிடுவோம். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி வீசாதீங்க, வாழைப்பழம் தோல் கூட முக அழகை மேம்படுத்த உதவுகிறது.

உங்கள் சரும அழகை மேம்படுத்த வாழைப்பழ தோலை பயன்படுத்துங்கள். அப்பறம் நீங்களே விரைவில் மாற்றத்தை உணருவீர்கள்.

newவேலைக்கு போகும் பெண்களுக்கு ஒரு நிமிட அழகு குறிப்பு..!

வாழைப்பழ தோலின் பலன்களை பற்றி தெரியுமா

சரி வாருங்கள் இவற்றில் வாழைப்பழ தோலை வைத்து சரும அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று காண்போம்.

இயற்கையான முறையில் ப்ளீச்சிங்:

தேவையான பொருட்கள்:

  1. வாழைப்பழ தோல் – 1
  2. ஓட்ஸ் – 2 ஸ்பூன்
  3. சர்க்கரை – சிறிதளவு
  4. பால் – தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பழ தோல், ஓட்ஸ் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக மைபோல் அரைத்து கொள்ளவும்.

அவற்றுடன் பால் கலந்து இந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் வரை காத்திருக்கவும்.

பின்பு முகத்தை கழுவவும், இவ்வாறு செய்வதினால் முகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றி சருமம் பொலிவுடன் காணப்படும்.

newதூங்கப்போறதுக்கு முன் இதை தடவுங்க முகம் சிவப்பாக மாறும்..!

சரும பளபளப்பாக வாழைப்பழ தோல் – முக அழகு குறிப்புகள்:

வாழைப்பழ தோலை முகத்தில் தேயுங்கள், சருமம் பிரவுன் நிறமாக மாறும் வரை தேய்க்கவும், பின்பு 10 நிமிடம் வரை காத்திருந்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் சருமம் பளபளப்பாக ஜொலிக்கும்.

வறட்சி மற்றும் முக சுருக்கம் நீங்க – அழகு குறிப்புகள் :

பாலாடை மற்றும் வாழைப்பழத்தோல் இரண்டையும் ஒன்றாக அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து, பின்பு முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் வறட்சி நீங்கி சருமம் மென்மையாகவும், சுருக்கம் நீங்கியும் காணப்படும்.

இந்த முறையை வாரத்தில் 2 முறை செய்யலாம்.

எண்ணெய் சருமத்திற்கு – முக அழகு குறிப்புகள் :

வாழைப்பழ தோல் மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் வரை காத்திருக்கவும்.

பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு மறைந்து விடும்.

கருவளையம் மறைய -அழகு குறிப்புகள் :

வாழைப்பழ தோலிலுள்ள நாரை எடுத்து கொள்ளவும், அதனுடன் கற்றாழை ஜெல்லியை கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு கருவளையம் உள்ள இடத்தில் தேய்த்து 5 நிமிடம் வரை காத்திருந்து பின்பு முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் கருவளையம் மறைந்து விடும்..

சருமம் நிறம் பெற அழகு குறிப்புகள் :

வாழைப்பழ தோலை நன்றாக மசித்து அதனுடன் 1 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து முகத்தில் தடவுங்கள்.

15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.  வாழைப்பழ தோல் சருமத்திற்கு நிறம் தரும். கருமையை போக்கி விடும்.

சூரிய கதிரின் பாதிப்புகள் முக அழகு குறிப்புகள் :

சூரிய கதிர்களால் உண்டான பாதிப்புகள்  நீங்க வாழைப்பழ தோலை கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யலாம்.

இதனால் சூரிய கதிர்களினால் உண்டான பாதிப்புகள் நீங்கி முகத்தில் உள்ள கருமை மறையும்.

newகழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement