நரைமுடி 2 நிமிடத்தில் மறைய இந்த ஹேர் டையை அப்ளை செய்யுங்கள் போதும்..!

Advertisement

1 Ingredient Instant Herbal Hair Dye in Tamil

பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை.. இளம் வயதினருக்கும் நரைமுடி வந்துவிடுகிறது. இந்த நரைமுடியை மறைக்க கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பலர் பயன்படுத்துகின்றன. இவற்றை பயன்படுத்துவதினால் பல விதமான பக்கவிளைவுகளை பிற்காலத்தில் சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆக என்றும் எந்த ஒரு சரும மற்றும் கூந்தல் சார்ந்த பிரச்சனைக்கு இயற்கையான முறையை தேர்வு செய்வது தான் என்றும் சிறந்தது. அந்த வகையில் இன்று நாம் ஒரே ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி இன்ஸ்டன்ட் ஹேர் டை தயார் செய்து தலைக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

மருதாணி ஹேர் டை செய்முறை:

தேவையான பொருள்:

  • மருதாணி – மூன்று கைப்பிடியளவு
  • தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை – 1 Ingredient Instant Herbal Hair Dye in Tamil:

முதல் நாளே மருதாணியை பறித்து சுத்தமாக அலசி, நன்றாக ஈரம் இல்லாமல் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு மறுநாள் அந்த மருதாணியை இரும்பு வாணலியில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் அந்த வாணலியை வைத்து மருதாணியை நன்கு 10 நிமிடம் கருக வறுக்கவும்.

மருதாணி நன்கு கருகி வந்ததும்  ஒரு பிளேட்டில் கொட்டி நன்கு ஆறவைக்கவும். மருதாணி நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த மருதாணியை ஒருமுறை சல்லடையால் அல்லது வடிகட்டியில் சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஒரு சுத்தமான பாட்டிலில் இந்த பவுடரை கொட்டி தேவைப்படும்போதேல்லாம் தலைக்கு பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மருதாணி பொடியை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன்பு இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

பயன்படுத்தும் முறை:1 Ingredient Instant Herbal Hair Dye

ஒரு பவுலை எடுத்துகொள்ளுங்கள் அதில் நாம் தயார் செய்த மருதாணி பவுடரை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், பின் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பிறகு தலையில் எங்கெல்லாம் நரை முடி உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்யுங்கள். பின் நீங்கள் எப்போதும் போல தலை சீவிக்கொண்டு உங்கள் வேலையை பார்க்கலாம். இப்படி செய்வதன் மூலம் தலையில் உள்ள நரை முடி கருமையாக மாறிவிடும்.

உங்களுக்கு தலையில் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இல்லை என்றால் ஒன்று பிரச்சனை இல்லை. தேங்காய் எண்ணெய்க்கு பதில் தண்ணீர் சேர்த்து கலந்து தலையில் அப்ளை செய்து தலையை சிறிது நேரம் காயவைத்து, தலையை சீவிக்கொள்ளலாம்.

இது ஒரு Temporary முறை தான் திடிரென்று நீங்கள் எங்காவது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த இன்ஸ்டன்ட் ஹேர் டையை தயார் செய்து தலையில் அப்ளை செய்வதன் மூலம், உங்கள் நரைமுடி கருமையாக மாற்றிக்கொள்ளலாம். பிறகு வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு தலை குளித்துவிடவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 நிமிடத்தில் இளநரை, முது நரையை கருப்பாக மாற்ற இதை Try பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement