10 Days Super Fast Hair Growth Remedy in Tamil
வணக்கம் நண்பர்களே..! ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். பொதுவாக நம்மில் பலருக்கும் தலைமுடி பிரச்சனை இருக்கிறது. அதுவும் தலை முடியிலேயே பல பிரச்சனைகள் இருக்கிறது. அதாவது முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை, நரை முடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். ஆனால் பெண்களுக்கு முடி நீளமாக வளரவில்லை என்ற பிரச்சனையும் சேர்ந்தே இருக்கிறது.
பொதுவாக அனைத்து பெண்களுக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதில் எந்த பயனும் இல்லை. அதனால் இன்றைய பதிவில் கூறும் முறையை ட்ரை செய்து பாருங்கள். கிடுகிடுவென்று வளரும் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
நெல்லிக்காய் எடுத்து கொள்ளவும்:
முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுபோல கறிவேப்பிலையும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி கருமையாக வளர உதவி செய்கிறது. மேலும் இந்த இரண்டு பொருளுமே முடி உதிர்வை தடுத்து முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது.
அதனால் பெரிய நெல்லிக்காய் 4 எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதுபோல கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவும்.
👉 2 முறை அப்ளை செய்தால் போதும் முடி கட்டுக்கடங்காமல் காடுபோல் வளர்ந்துவிடும்
மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ள வேண்டும். அதில் நாம் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.
பின் இதை வடிகட்டி நீரை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
👉 தலையில் தடவி குளிக்க வேண்டாம் தொடர்ந்து 7 நாட்கள் தடவி வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்
பயன்படுத்தும் முறை:
நாம் தயார் செய்து வைத்துள்ள நீரை உங்கள் முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியின் அடிப்பகுதி வரை நன்றாக அப்ளை மசாஜ் செய்ய வேண்டும். பின் அப்படியே 20 லிருந்து 30 நிமிடம் வரை வைத்திருந்து பின் உங்கள் தலையை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கிடுகிடுவென்று வளரும் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |