நரைமுடி, செம்பட்டை முடி நிரந்தரமாக கருமையாக மாறுவதற்கு இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

100 Natural Black Hair dye in Tamil

100 Natural Black Hair dye in Tamil

நண்பர்களே நரைமுடி பிரச்சனைக்கு அற்புதமன தீர்வுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..! பொதுவாக நரை முடியை தடுப்பதற்கு முக்கியமான வழி என்றால் அது உணவு பழக்கம் தான். தலை முடிக்கும் உங்கள் உடலுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது போல் மாற்றி அதனை சார்ந்த பொருட்கள் கீரை வகைகள், பழங்கள், புரத சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ளுதல் அவசியம்.

சிலர் நினைப்பீர்கள் நான் தினமும் சரியாக சாப்பிடுகிறேன், ஆனாலும் எனக்கு நரை முடி பிரச்சனை என அனைத்தும் உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பீர்கள். பொதுவாக நாம் தலை முடியை சரியாக பார்த்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தலை முடியை ஈரமாக பின்னுவது, அதேபோல் தலையை நீண்ட நாட்களாக அலசாமல் வைத்துக்கொள்வது என்று அனைத்து பிரச்சனைகள் உள்ளது. இதற்கு தீர்வு தரும் விதமாக கெமிக்கல் இல்லாமல் சூப்பரான ஹேர் டை போல் எண்ணெய் உள்ளது. அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

100 Natural Black Hair dye in Tamil:

100 Natural Black Hair dye in Tamil

ஒரு நாளுக்கு தேவையான தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளவும். எவ்வளவு என்றால் 50 கிராம் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதனை அடுப்பை பற்றவைத்து அதில் வைக்கவேண்டும். அதன் பின்பு அதில் 50 கிராம் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றவேண்டும்.

 100 Natural Black Hair dye in Tamil

அது ஓரளவு கொதிக்கும் தன்மை வந்தவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்க்கவேண்டும். 5 நிமிடம் அப்படியே கொதிக்கவிடவும்.

அதனை அப்படியே ஆறவிட்டு அப்படியே எடுத்துக் கொள்ளலாம் அல்லது வடிகட்டி கூட எடுத்துக் கொள்ளலாம். இப்போது ஹேர் ஆயில் ரெடி.

முன் நெற்றி ஏறிக்கொண்டே போகிறதா  அப்போ விளக்கெண்ணெயில் இந்த பொருட்களை சேர்த்து தடவினால் போதும்.

பயன்படுத்தும் முறை:

தலையில் எந்த ஒரு எண்ணெயும் அப்ளை செய்யாமல், இந்த எண்ணெயை அப்படியே அப்ளை செய்யவேண்டும். முதலில் வேரிலிருந்து ஆரம்பித்து நுனி வரை அப்ளை செய்து கொள்ளவும்.

அதன் பின்பு உங்கள் தலை முடியை கெமிக்கல் இல்லாத ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை அலசிக்  கொள்ளுங்கள்..!  அவ்வளவு தான்.

வெறும் 5 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாறிவிடும்..இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil