15 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்த வெந்தயம், கருவேப்பிலை மட்டும் போதும்

Advertisement

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

பெண்கள் அழகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதை விட முடியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக கடையில் விற்கும் கண்ட கண்ட ஆயிலை பயன்படுத்தி முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாதீர்கள். நாளடைவில் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.

அதனால் இயற்கையான முறையில் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயம் மற்றும் கருவேப்பிலையை வைத்து எண்ணெய் தயாரிப்பது என்று இந்த பதிவில் சொல்கிறேன். இந்த பதிவை படிப்பதோடு இல்லாமல் உங்கள் வீட்டில் செய்து தலையில் அப்ளை செய்து பாருங்கள் 15 நாட்களில் முடியின் வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிக்கும்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – 3 கைப்பிடி
  • தேங்காய் எண்ணெய் –400 ml  

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கருவேப்பிலை எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

 முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

முதலில் மிக்சி ஜாரில் வெந்தயம் மற்றும் கருவேப்பிலை இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள் ⇒ முடி கொட்டுவதை நிறுத்தி கத்தை கத்தையாக புதிய முடி கரு கருவென்று வளரும்..! இதை 20 நாட்கள் தடவி பாருங்கள்..!

பின் அடுப்பில் கடாய் வைத்து 400 ml தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் லேசாக சூடு வந்ததும் கருவேப்பிலை பொடியை சேர்த்து கலந்து விடவும். முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து 15 நிமிடம் வரைக்கும் எண்ணெயை கலந்து விட வேண்டும்.

15 நிமிடம் கழித்து எண்ணெய் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் ஆறிய பிறகு வடிக்கட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

அப்ளை செய்யும் முறை:

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரவு தூங்குவதற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து காலையில் தலை தேய்த்து குளித்து விட வேண்டும். இல்லையென்றால் 2 மணி நேரம் தலையில் அப்ளை செய்து பிறகு குளித்து விடலாம். இது போல செய்து வந்தால் 15 நாட்களில் முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நீங்களே பார்ப்பீர்கள். ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே.!

வடிகட்டிய சக்கையை பயன்படுத்துவது:

வடிகட்டிய கருவேப்பிலை மற்றும் வெந்தயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து அதில் தயிர் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை தலை குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் அப்பளை செய்து பிறகு தலை தேய்த்து குளித்து விடவும். இப்படி செய்வதினால் முடி பளபளப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ முன் நெற்றியில் தலை முடி ஏறிக்கொண்டே செல்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement