ஆண்கள் முகம் பளிச்சென்று இருக்க இதை செய்யுங்க போதும்..!

Advertisement

 Aangal Azhagu Kurippu

பொதுவாக நாம் அனைவரும் பெண்களுக்கு என்று நிறைய வகையான அழகு குறிப்புகள் பற்றி கேள்வி பட்டிருப்போம். அதோடு மட்டும் இல்லாமல் பெண்கள் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து பார்லருக்கு செல்வார்கள். அந்த வகையில் பெண்களுக்கு எப்படி சரும பிரச்சனைகள் உள்ளதோ அதே போல் ஆண்களுக்கும் சரும பிரச்சனைகள் இருக்கும். அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் விதமாக இன்று ஆண்கள் முகத்திற்கான அழகுக்குறிப்புகளை இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆண்கள் முகம் பளிச்சென்று இருக்க:

ஆண்கள் முகம் பளிச்சென்று இருக்க

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. சர்க்கரை – 1 ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

மேலே கூறியுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

முதலில் சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும் அதில் எடுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக 5 முதல் 10 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

முகம் ஈரப்பதத்துடன் இருக்க:

காலையில் மென்மையான க்ளென்சர் மற்றும் மாலையில் ஜெல் வடிவிலான கிளென்சரை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உங்கள மாசுக்கள் அனைத்தும் நீங்கி முகம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.

Life Style👇👇 1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க

Aangal Mugam Karumai Neenga:

முகம் ஈரப்பதத்துடன் இருக்க

  • வைட்டமின் E மாத்திரை – ஒன்று
  • தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது:

ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் வைட்டமின் E மாத்திரையில் உள்ள ஆயிலை பிழிந்து ஊற்றவும், பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் எங்கெல்லாம் கருமையாக உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்யவும்.

பின் இரவு அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரமிக்கும்.

வறண்ட சருமம் நீங்க:

ஆண்களுக்கு வீட்டை விட பெரும்பாலும் வெளியே சென்றுவர வேண்டிய வேலை இருக்கும். இதன் காரணமாக சருமம் வறண்டு போய்விடும். எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்றது போல் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் வெயிலினால் ஏற்படும் சரும வறட்சி நீங்கி சருமம் சாப்டாக இருக்கும்.

Life Style👇👇எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..

ஆண்கள் அழகு குறிப்புகள்:

ஆண்கள் அழகு குறிப்புகள்

பொதுவாக அனைவரையுமே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தோல்மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.

சன் ஸ்கீரின்கள் இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது. புற ஊதா கதிர்வீச்சிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியம். ஆக உங்கள் சருமத்திற்கு ஏற்றது போல் சன் ஸ்கிரீன்களை பயன்படுத்துங்கள்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement