அழகிற்கு மேலும் அழகை சேர்க்க பல இயற்கை டிப்ஸ்கள்..! Natural Beauty Tips in tamil..! alagu kurippu in tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் பல விதமான அழகு குறிப்புகளை (Tamil Beauty Tips) இன்னக்கி நாம பார்க்க போறோம். பெண்கள் அனைவரும் முக அழகை வெள்ளையாக மாற்ற பியூட்டி பார்லர் சென்று அங்குள்ள கெமிக்கல் சார்ந்த பொருட்களை முகத்தில் போடுவதனால் முகத்தில் ஏராளமான பிரச்சனைகள் பெண்களுக்கு வருகிறது. அதை இயற்கை முறையில் எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
ஆண்களுக்கான ஹேர் ஸ்டைல்..! Latest Men Hairstyles..! |
முகம் சிவப்பழகு பெற இயற்கை அழகு குறிப்புகள் – தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
- தேன் – 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – தேவையான அளவு
முகம் சிவப்பழகு பெற அழகு குறிப்புகள் / beauty tips in tamil – அழகு குறிப்பு 1:
முதலில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ளவும். பின் 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும். அடுத்ததாக தேன் 1/2 ஸ்பூன் சேர்க்கவும். பின் எலுமிச்சை சாறு தேவையான அளவு சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக எல்லாவற்றையும் நன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணிக்கோங்க. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்துக்கொள்ளவும்.
இந்த பேஸ்டை முகத்தில் ஒரு 10 நிமிடம் நன்றாக தேய்த்து வைக்கவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம். முகம் கழுவிய பின் பியூட்டி பார்லர் சென்ற மாறி உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும். இத கண்டிப்பா உங்க வீட்ல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க.
முடி உதிராமல் இருக்க கருவேப்பில்லை ஹேர் மாஸ்க் அழகு குறிப்புகள் – தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- தயிர் – 3 ஸ்பூன்
முடி உதிராமல் இருக்க கருவேப்பில்லை ஹேர் மாஸ்க் / mudi valara tips in tamil – அழகு குறிப்பு 2:
முதலில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக்கொள்ளவும். பின் தயிர் 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கருவேப்பிலை மற்றும் தயிரை நன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்த கருவேப்பிலை பேஸ்டை தலையில் வேர்களில் படும் அளவுக்கு நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து தண்ணீரில் வாஷ் பண்ணிக்கலாம். அதுவும் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீரில் வாஷ் பன்னிங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்தில் 2 முறை செய்து வந்திங்கனா கண்டிப்பா முடி கொட்டும் பிரச்சனை இருக்காது. ட்ரை பண்ணி பாருங்க.
கழுத்தில் உள்ள கருமை நீங்க அழகு குறிப்பு – தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 2 ஸ்பூன்
- ஓட்ஸ் பவுடர் – 2 ஸ்பூன்
- கடலை மாவு – 2 ஸ்பூன்
- பால் – தேவையான அளவு
கழுத்தில் உள்ள கருமை நீங்க அழகு குறிப்பு / tamil beauty tips – அழகு குறிப்பு 3:
முதலில் கோதுமை மாவு 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதோடு ஓட்ஸ் பவுடர் சேர்க்கவும். பின் கடலை மாவை சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து தேவையான அளவுக்கு பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் செய்துகொள்ளளவும்.
இந்த பேஸ்ட் ரெடி ஆன பிறகு கழுத்தில் 2 நிமிடம் மசாஜ் செய்யவும். அடுத்து 20 நிமிடம் நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காயவைத்த பிறகு கழுத்தை வாஷ் பண்ணிக்கலாம்.
இதை வாரத்தில் 2 நாள் யூஸ் பண்லாம். இத தொடர்ந்து 3 வாரம் செஞ்சி வந்திங்கனா கண்டிப்பா உங்க கழுத்து கருமை நீங்கிவிடும்.
100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..! |
ஒரே வாரத்தில் கண் கருவளையம் நீங்க அழகு குறிப்புகள் – தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 1/2 (தோல் சீவியது)
- வெள்ளரிக்காய் – 1/2 (வட்ட வடிவில் தோல் சீவியது)
- தேன் – 1 ஸ்பூன்
ஒரே வாரத்தில் கண் கருவளையம் நீங்க அழகு குறிப்புகள் / Tamil Beauty Tips – அழகு குறிப்பு 4:
இப்போ கருவளையம் போக முதலில் உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை நன்றாக மிக்ஸியில் அரைத்து வைத்து கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்த உருளைக்கிழங்கு வெள்ளரிக்காயில் தேன் 1 ஸ்பூனை சேர்த்துக்கொள்ளவும்.
இப்பொது ரெண்டையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். பேஸ்ட் மாறி வந்தவுடன் கண்ணுக்கு கீழே உள்ள கருவளையத்தில் தடவி 15 நிமிடம் காயவைக்க வேண்டும்.
அதன்பிறகு கண்களை கழுவிக்கொள்ளலாம். இந்த டிப்ஸை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்திங்கனா கண்டிப்பா கண்ணில் ஏற்படும் கருவளையம் மறைந்துவிடும்.
முடி அடர்த்தியாக நீளமாக வளர / முடி அடர்த்தியாக வளர அழகு குறிப்புகள் – தேவையான பொருட்கள்:
- ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
- முட்டை – 1
- எலுமிச்சை – 1
முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் best home remedy / mudi adarthiyaga valara oil in tamil – அழகு குறிப்பு 5:
முதலில் ஒரு பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உடைத்து எடுத்துக்கொள்ளவும். அதிலேயே 1/2 எலுமிச்சை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதோடு ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும். மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும்.
ரெடி பண்ணிவெச்ச ஆயிலை முடியோட வேர்களில் இருந்து தடவிவரவும். இதை 30 நிமிடம் நன்றாக காயவைக்க வேண்டும்.
அடுத்து தலையை நீங்க வாஷ் பண்ணிக்கலாம். மறுபடியும் ஷாம்பு போடணும் என்ற அவசியம் இல்லங்க. முட்டை வந்து ப்ரோடீன் சத்து கொடுக்கும். ஆலிவ் ஆயில் தலையில் உள்ள வறட்சித்தன்மையை நீக்கும்.
இந்த டிப்ஸை கண்டிப்பா செஞ்சி பாருங்க. முடி உதிரும் பிரச்சனை அறவே இருக்காது. அதோடு முடி அடர்த்தியாகவும் நீளமாகவும்(mudi valara kurippu) வளரும்.
முகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |