இயற்கை அழகு குறிப்புகள் 1000 (Natural Beauty Tips in Tamil)..!

natural beauty tips

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (Natural Beauty Tips in Tamil)..!

உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு பெற இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) இதோ..! 

இன்றைய அழகு குறிப்புகள்:-

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க:-

சிலருக்கு சருமத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கினை அப்ளை செய்யுங்கள் சரியாகிவிடும்.

அதாவது ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்துவர. சருமத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி சருமம் பட்டுப்போல் பளபளக்கும்.

அரிசி களைந்த நீர்:-

தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.

வெள்ளரிக்காய் – Beauty Tips in Tamil:

அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) – வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.

எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

எனவே கண் அழகை அதிகரிக்க தினமும் கண்களில் வெள்ளரிக்காயை வைத்து சிறிது நேரம் அப்படியே அமர்த்திருங்கள், பின்பு கண்களை கழுவிவிடுங்கள்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

முகத்தை கழுவது மிகவும் அவசியம்:

அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) – தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.

ஆவிப் பிடித்தல் – Beauty Tips in Tamil:

அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) – சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது, இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

பழங்களில் மாஸ்க் – Beauty Tips in Tamil:

அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) – முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.

அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

கூந்தல் பராமரிப்பு – Beauty Tips in Tamil:

கூந்தல் பராமரிப்பு: தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும்.

குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!

தயிர் – Beauty Tips in Tamil:

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.

சருமம் பொலிவு பெற சூப்பர் மாய்ஸ்சுரைசர்:

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

எலுமிச்சை – Beauty Tips in Tamil:

கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றது, அதாவது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து, பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். மேலும் பொடுகு தொல்லை நீங்கும், அதேபோல் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படும்.

உதடு மென்மையாக – Beauty Tips in Tamil:

உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் காணப்படும்.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!