Almond Oil To Remove Dark Circles Under Eyes
வணக்கம் நண்பர்களே. இக்காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம் வருவது தான். கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக அதிக நேரம் தூங்காமல் இருப்பதனால் தான் கருவளையம் வருகிறது. கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும். எனவே, கருவளையத்தை போக்க பல்வேறு இயற்கை குறிப்புகள் உள்ளது. அவற்றில் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். அதாவது பாதாம் எண்ணெயை பயன்படுத்தி எவ்வாறு கருவளையத்தை மறைய வைப்பது எப்படி என்பதை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.
முகத்தின் அழகை கெடுப்பதே கருவளையம். கருவளையம் பலபேருக்கு வந்திருப்பதை நாம் அனைவருமே பார்த்து இருப்போம். கண்களுக்கு கீழே மட்டும் கருப்பாக அசிங்கமாக இருக்கும். ஆகையால் உங்களுக்கு பயனுள்ள வகையில் பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்தினால் கருவளையம் காணாமல் போகும் என்பதை பற்றி விவரித்துள்ளோம்.
How To Get Rid of Dark Circles Around Eyes Naturally in Tamil:
பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் நம்முடைய சருமத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பாதாம் எண்ணெய் மசாஜ்:
கருவளையம் உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் பாதம் எண்ணெயை சில துளிகள் கையில் எடுத்துக்கொண்டு கருவளையம் உள்ள இடத்தில மசாஜ் செய்ய வேண்டும். கருவளையம் உள்ள இடத்தில் மட்டுமில்லாமல் முகத்தின் எல்லா பகுதிகளிலும் மசாஜ் செய்யலாம்.
பிறகு, மறுநாள் காலையில் வெறும் தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
உங்க முகத்தில் பருக்கள் அதிக அளவு உள்ளதா..? அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்..
ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெய்:
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவில் ரோஸ் வாட்டர் மற்றும் பாதாம் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். இவற்றை நன்றாக கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு, 10 நிமிடம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் கருவளையமும் எளிதில் நீங்கிவிடும்.
பால் மற்றும் பாதாம் எண்ணெய்:
தினமும் இரவில் தூங்கும் முன், பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து கருவளையம் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் விரைவில் நீங்கிவிடும்.
அதுமட்டுமல்லாமல், பால் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து முகத்தில் பேஸ் பேக்காகவும் போடலாம். இம்முறையை நீங்கள் செய்வதன் மூலம் முகம் பொலிவாக இருப்பதுடன் இளமையான தோற்றத்தையும் அளிக்கும்.
உங்க உதடுகள் கோவைப்பழம் போல் சிவப்பாக மாற பாதாம் எண்ணெயுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |