முகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..! Aloe Vera Face Pack in Tamil

Advertisement

முகம் வெள்ளையாக கற்றாழை பேஷியல்..! Aloe Vera Face Pack Home Made..!

Aloe Vera Face Pack in Tamil:- நம் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புத அழகுசாதன பொருளாக கற்றாழை விளங்குகிறது. கற்றாழையை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதினால் சருமம் சாப்டாக இருக்கும், முக கருமை நீங்கும், சரும வறட்சி நீங்கும், சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சரி இந்த கற்றாழையை பயன்படுத்தி முகத்திற்கு எப்படி பேஷியல் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.

வீட்டிலிருந்தபடியே இயற்கையான முறையில் அழகைபெற, அனைத்து சருமத்திற்கும் ஏற்ற அழகுகுறிப்புகள் பற்றி முழு விவரங்களையும் Facebook – ல் பெற இங்கே கிளிக் பண்ணவும்.👇 இங்கே கிளிக் பண்ணவும் 👉 Facebook Link: Click Here

முகம் பிரகாசமாக 4 வகையான ஃபேஸ் பேக்..!

How to Make Aloe Vera Face Pack in Tamil..!

Aloe Vera Face Pack

Stop: 1 cleansing 

முதலில் முகத்திற்கு கிளென்சிங் செய்ய வேண்டும். முகத்துக்கு கிளென்சிங் செய்வதினால் சருமத்தில் உள்ள அழுக்கு, மாசு, தூசி போன்றவையெல்லாம் நீங்கும். முகத்திற்கு கிளென்சிங் செய்வதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் அப்ளை செய்து நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின் சருமத்தை இரு கார்டன் பஞ்சினை பயன்படுத்தி துடைத்து விடுங்கள்.

Stop : 2 Scrubbing 

கிலேசன்சிங் செய்தபிறகு முகத்திற்கு ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். இதற்கு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இப்பொழுது ஸ்க்ரப்பிங் தயார் இதனை முகத்தில் அப்ளை செய்து நன்றாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பின் சருமத்தை இரு கார்டன் பஞ்சினை பயன்படுத்தி துடைத்து விடுங்கள். இவ்வாறு கற்றாழையை பயன்படுத்தி சருமத்திற்கு ஸ்க்ரப்பிங் செய்வதினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று சருமம் என்றும் இளமையுடன் இருக்கும்.

கற்றாழை அழகு குறிப்புகள்

Stop: 3 Steaming 

steaming face

அடுத்ததாக சருமத்திற்கு நீராவி பிடிக்க வேண்டும். அழகு பராமரிப்பு குறிப்புகளிலேயே செலவே இல்லாத பராமரிப்பு குறிப்பு என்றால் முகத்திற்கு நீராவி பிடிப்பது என்று சொல்லலாம். முகத்திற்கு நீராவி பிடிப்பதினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் சரும துவாரங்கள் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் இளமையாக வைத்துக்கொள்ளும். எனவே முகத்திற்கு அடிக்கடி நீராவி பிடியுங்கள்.

சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..!

Stop: 4 Face massage

அடுத்ததாக முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். எனவே ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 ஸ்பூன் Glycerine மற்றும் ஒரு விட்டமின் ஈ மாத்திரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு கார்டன் பஞ்சினை பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக துடைக்க வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதினால் இயற்கையாவே சருமம் பளிச்சென்று காணப்படும்.

Stop: 5 Aloe Vera Face Pack in amil

இறுதியாக சருமத்திற்கு face pack போட வேண்டும் இதற்கு ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் இவை இரண்டையும் ஒன்றாக கலந்தால் face pack தயார் இதனை சருமத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள், பின் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பெண்கள் இனிமேல் அழகை பராமரிக்க வேண்டும் என்பதற்காக பியூட்டி பார்லருக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை கற்றாழையினால் செய்யப்பட்ட இந்த பேஷியலை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் சருமம் என்றும் இளமையாக மற்றும் பளிச்சென்று காணப்படும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் (Aloe Vera Face Pack in amil) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement