உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..!

Advertisement

கற்றாழை அழகு குறிப்புகள் / Katralai Uses for Face in Tamil..! | உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழையின் பயன்கள்..!

அழகு குறிப்புகள் (Beauty Tips) – கற்றாழை (Aloe Vera Uses in Tamil) ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள்  இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

சோற்று கற்றாழை அழகு குறிப்புகள் / Katralai Uses for Face in Tamil:

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.

இதையும் படிக்கவும்  Aloe Vera Face Pack in Tamil

அழகு குறிப்புகள் (Beauty Tips) – தலைமுடி நன்கு வளர:

Katrazhai Tips in Tamil – தலைமுடி நன்கு வளர – பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை நீங்க கற்றாழை ஜெல் (Aloe vera Beauty Tips) மிகவும் பயன்படுகிறது.

மேலும் தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது.

தலைமுடி நன்கு வளர ஒரு மடல் கற்றாழையை எடுத்து அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, அவற்றில் இதுக்கும் ஜெல்லை எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த இந்த கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்.

இப்பொழுது இந்த ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து தலைமுடியின் வேர்பகுதில் நன்றாக ஸ்ப்ரே செய்து, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து தலை அலச வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் தலைமுடி நன்றாக வளரும், பொடுகு பிரச்சனை இருக்காது, முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இருப்பினும் இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும்.

Katralai Uses For Face in Tamil:-

கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கருவளையங்களை மறைய செய்ய ரொம்பவே பயன்படுகிறது.

எனவே கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதினால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும் இருப்பினும் இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர வேண்டும்.

மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் இருந்தால் இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யலாம்.

அழகு குறிப்பு (Beauty Tips) – கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க:

சில பேருக்கு கழுத்து பகுதி மிகவும் கருப்பாக இருக்கும். அவர்கள் இந்த கற்றாழை ஜெல்லை கழுத்து பகுதில் நன்றாக அப்ளை செய்து, கொஞ்ச நேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்வதினால் கழுத்து பகுதில் உள்ள கருமை நிறம் மறைந்து விடும். இருப்பினும் இந்த முறையை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.

அழகு குறிப்பு (Beauty Tips)- பாத வெடிப்புகள் மறைய:

பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சனை, பாதவெடிப்பு பிரச்சனை  என்று சொல்லலாம். இந்த பாத வெடிப்பு மறைய கற்றாழை ஜெல்லினை பாத வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து செய்து வர பாத வெடிப்பு பிரச்சனை உடனே சரியாகும்.

கற்றாழை அழகு குறிப்புகள்(Aloe vera Beauty Tips):

Katralai Uses for Face in Tamil:- ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும்முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.

இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

கற்றாழை அழகு குறிப்புகள்(Aloe vera Beauty Tips):

இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை.

அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

 

இதையும் படிக்கவும்  முகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்..! கரும்புள்ளிகள் போக என்ன செய்ய வேண்டும்?

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000
Advertisement