கலாக்காய் பயன்படுத்தி தலைமுடி நீளமாகவும் மற்றும் முகம் சிகப்பழகு பெறலாம்..!

breadfruit

சருமம் மற்றும் கூந்தலை பாதுகாக்கும் கலாக்காய்:

கலாக்காய் பயன்கள்: தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க ஒரு சிறந்த பழமாக கலாக்காய் இருக்கிறது. இந்த கலாக்காயை பொதுவாக அனைவருக்கும் தெரியும். இந்த கலாக்காயில் (breadfruit) அன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.

மேலும் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் தன்மைகளை கொண்டுள்ளது இந்த கலாக்காய். இந்த கலாக்காயில் வைட்டமின் மற்றும் கனிமங்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

மேலும் இந்த கலாக்காயை உட்கொள்வதினாலும், உடல் மற்றும் சருமத்திற்கு மாஸ்க் போல் பயன்படுத்துவதினாலும் பல வகையான நன்மைகளை அளிக்கின்றது.

சரி வாங்க இந்த கலாக்காயை (breadfruit benefits) பயன்படுத்துவதினால் சருமம் மற்றும் கூந்தலுக்கு என்னென்ன அற்புத நன்மைகள் நிகழும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

newஅனைத்து தலைமுடி பிரச்சனைகளுக்கும் இயற்கை வைத்தியம்..!

முதுமையை தடுக்க:

கலாக்காய் (breadfruit) வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்கும் தன்மை இருப்பதால் வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்துகிறது.

அதனால் வயது முதிர்வைத் தடுக்கும் க்ரீம் மற்றும் ஜெல் போன்றவற்றில் கலாக்காய் (breadfruit) ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கலாக்காய் சாப்பிடுவதால் அல்லது பயன்படுத்துவதால் பொலிவான சருமம் உறுதியாக கிடைக்கிறது.

சரும நிறத்தை பாதுக்காக்க:

சருமத்தில் ஏற்படும் நிறமிழப்பை குறைக்க கலாக்காய் முக்கிய பங்களிக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகளை நீக்குகிறது. முகத்தை வெண்மையாக வைத்துக்கொள்ள கலாக்காய் (breadfruit) பயனுள்ளதாக இருக்கிறது.

பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் கட்டிகள் நீங்க:

பருக்கள், கட்டிகள், மற்றும் கொப்பளங்கள் சிகிச்சைக்கு கலாக்காய் (breadfruit) பெருமளவில் பயன்படுகிறது. இதன் அழற்ஜி எதிர்ப்பு தன்மை காரணமாக பல்வேறு சரும பிரச்சனைகளையும் தீர்க்க இது உதவுகிறது.

சரும தழும்புகள் மறைய:

பருக்கள் மற்றும் கட்டிகளை போக்குவதில் மட்டுமல்ல பல்வேறு சரும பாதிப்புகளையும் போக்க வல்லது இந்த கலாக்காய். பருக்கள் மற்றும் கட்டிகள் மூலமாக சருமத்தில் உண்டாகும் தழும்புகளை போக்கி களங்கமற்ற சருமம் உண்டாக்குவதில் நல்ல பலன் தருகிறது.

new7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்..!

சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள:

சருமத்தை புத்துணர்ச்சி தந்து நீர்ச்சத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது இந்த கலாக்காய். நம் உடலில் மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதி சருமம் என்பதால் எளிதில் எந்த ஒரு பிரச்சனையும் அதனை பாதிக்கலாம்.

எனவே காலக்கயை நம் சரும பாதுகாப்புக்கு பயன்படுத்தி வந்தால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த கலாக்காய் பெரிதும் உதவுகிறது.

மென்மையான உதடுக்கு:

கலாக்காய் குறிப்பாக சருமத்தை பாதுகாக்கும் பணியை செய்வதுடன் சேர்த்து, அழகான உதடுகளை பெறுவதற்கும் பெரிதும் உதவுகிறது. கலாக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உதடுகள் மிகவும் மிருதுவாக, மென்மையாக நீர்ச்சத்துடன், பிங்க் நிறத்தில் தாங்களே உணர முடியும்.

கலாக்காயில் அதிகளவு ஈரப்பதம் நிறைந்துள்ளதால் உதடுகளுக்கு பல நன்மைகள் சேர்க்கிறது இந்த கலாக்காய்.

கூந்தலின் வேர்களுக்கு:

கலாக்காய் பொதுவாக சருமத்தை பாதுகாப்பதுடன், கூந்தலின் வேர்களுக்கு நல்ல வலிமைகளையும் அளிக்கின்றது. குறிப்பாக கலாக்காயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் கூந்தல் நல்ல வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் பளபளப்பாக மற்றும் அடர்த்தியாகவும், நீளமாகவும் காணப்படும்.

மேலும் கலாக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வு, முடி உடைவது போன்ற பிரச்சனனைகளை சரி செய்து கூந்தலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு:

கலக்காயில் (breadfruit) நிறைந்துள்ள புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

இவற்றில் உள்ள வைட்டமின்களான ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி, ஈ போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. புரதம், ஊட்டச்சத்து, மற்றும் வைட்டமின்கள் இணைந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு:

கூந்தல் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருப்பதற்கு கண்டிப்பாக உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எனவே உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கலாக்காய் முக்கிய பங்களிக்கின்றது. உச்சந்தலை ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான முடியைத் தருகிறது.

தொடர்ந்து கலாக்காயை பயன்படுத்தி வருவதால் முடியின் வேர்க்கால்கள் வலிமையடைந்து போதிய கவனம் மற்றும் பராமரிப்பு கிடைக்கப்பெறுகிறது.

newஉங்கள் நகங்களை அலங்காரம் செய்ய பல வகை நெயில் டிசைன்..! Beautiful nail art designs images..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
SHARE