வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரப்பு பொடி தலை முடிக்கு இவ்வளவு நன்மைகள் அளிக்கிறதா ?

Updated On: October 4, 2025 1:15 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Arappu Powder Benefits In Tamil 

இன்றைய பதிவில் அரப்பு பொடி நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். அரப்பு பொடி ALBIZIA AMARA என்னும் தாவர பெயரைக் கொண்டுள்ளது. இந்த அரப்பு பொடி பற்றி அதிகமாக இருக்கும் தெரிந்திருக்க இயலாது. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதை தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அரப்பு மரத்தில் இருக்கும் இலையை பறித்து பொடி செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த அரப்பு பொடியில் அதிக மருத்துவ குணம் உள்ளது. இது உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கவும். முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரப்பு பொடி இயற்கையாக தயாரிக்கப்படும் பொருளாகும். இது தலைமுடி மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முற்றிலுமாக அகற்றும் தன்மையை கொண்டுள்ளது.

மேலும், அரப்பு பொடியில் அதிக குளிர்ச்சி நிறைந்துள்ளதால் வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரப்பு பொடியில் வைட்டமின் பி மற்றும் ஃபிளவனாய்டுகள் ஆல்கலாய்டு கிளைக்கோசைடுகள் போன்ற ஆற்றல் நிறைந்த ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இது தலைமுடிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அளிக்கிறது. இந்த பதிவில் அரப்பு பொடியின் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க….

முடி உதிர்வை கட்டுப்படுத்தும்:

நமது உடலில் அதிக சூடு காரணமாக முடி உதிர்வு ஏற்படுகிறது. அரப்பு பொடியானது உடல் சூட்டை தணிக்கும் தன்மையை கொண்டுள்ளதால் இதனை வாரம் மூன்று முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வை தடுத்து நிறுத்த முடியும்.

பொடுகு பிரச்சனை :

தலையில் பொடுகு மற்றும் அரிப்பு பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அரப்பு பொடி ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. அரப்பு பொடியில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா தலையில் பொடுகு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. 

எண்ணெய் பசையை நீக்க:

தலைமுடியை பளபளப்பாக வைத்துகொள்ள அதிகமான நபர்கள்  ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதனால் தலைமுடிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. முடியை பளபளப்பாக வைத்து கொள்வதில் அரப்பு பொடி முக்கியப்பங்கு வகிக்கிறது. இது தலையில் இருக்கும் எண்ணெய் பசையை உறிஞ்சி கூந்தலை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.

Clencer: 

அரப்பு பொடி  இயற்கையாகவே ரசாயனகள் சேர்க்காத மிக சிறந்த க்ளென்சராக பயன்பட்டு வருகிறது. இது சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எக்ஸ்ஃபோலியேட் : 

சருமத்தில் இறந்த செல்களை நீக்குவதற்கு எஸ்சோபோலியேட்டரை பயன்படுத்தலாம். இதை அரப்பு பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் அரிசிமாவு சேர்த்து பேஸ்ட் செய்து வாரம் 2 முறை முகத்தில் மசாஜ் செய்து வருவதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

சருமம் மென்மையாக:

சருமம் மென்மையாக இருக்க வறண்ட சருமத்தை மென்மையாக வைத்திருக்க சோப்பிற்கு பதிலாக அரப்பு பொடியை பயனப்டுத்துவதன் மூலம் குழந்தை சருமத்தை போல மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

முகப்பரு நீங்க:

முகத்தில் முகப்பரு வருவதற்கு முக்கிய காரணம் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதுதான். அரப்பு பொடியை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை ஏற்படாமல் தடுக்கிறது. இது மட்டுமில்லாமல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நலங்கு மாவு தயாரிக்கும் முறை.!

அரப்பு பொடியை  பயன்படுத்தும் முறை:

அரப்பு பொடியை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது  உங்களின் தலைமுடிக்கு ஏற்றவாறு அரப்பு பொடியை எடுத்து அதனுடன் கஞ்சி தண்ணி சேர்த்து கலந்துகொள்ளவும் நீங்கள் தலைக்கு குளிக்க போவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் தலையில் தடவிய பிறகு  இந்த அரப்பு பொடியை முடிக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வரவும்.

அரப்பு பொடியை சருமத்திற்கு பயன்படுத்தும் போது ஒரு ஸ்பூன் அரப்பு பொடி அதனுடன் ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து  முகத்தில் 10 நிமிடம் ஊரவைத்து முகத்தை கழுவி  வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்றவற்றைநீக்குவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

யார் பயன்படுத்த கூடாது?

ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் அரப்பு பொடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த பொடியை பயன்படுத்தும் போது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.  அரப்பு பொடி அதிக க்ளென்சர் பண்புகளை கொண்டிருந்தாலும், வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை பயன்படுத்தும் போது பாதிப்பை ஏற்படுத்த கூடும். 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now