முகத்தை தங்கம் போல் வைத்திருக்கும் ஆவாரம்பூ அழகு குறிப்புகள் (Avarampoo Face Pack for Skin Whitening)
Avarampoo face pack for skin whitening / அழகு குறிப்புகள் – ஆவாரம்பூவில் ஏராளமான மருத்துவகுங்கள் நிறுத்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆவாரம்பூவில் தினமும் டீ செய்து அருவத்துவதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றது.
இந்த ஆவாரம்பூ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும அழகை அதிகரிக்கவும், பயன்படுகிறது. சரி இங்கு ஆவாரம்பூவை (Avarampoo face pack for skin whitening) வைத்து செய்ய கூடிய அழகு குறிப்பு டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…
இத்தனை இருக்குதா ஆவாரம் பூவில்..? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்..!
ஆவாரம் பூ பொடி அழகு குறிப்புகள் | Avarampoo Beauty Tips in Tamil:
Avarampoo Face Pack Benefits in Tamil:
சாதாரணமாக நாம் வெயிலில் வெளியே சென்று வந்தாலே சருமம் பொலிவிழந்து காணப்படும். இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு ஆவாரம்பூவை தேவையான அளவு பறித்து வெயிலில் இரண்டு நாட்கள் காயவைக்கவும்.
பின்பு காய்ந்த பூவை மிக்ஷியில் அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். அரைத்த இந்த பொடியை பவுலில் இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதனுடன் காய்ச்சாத பசும் பால் இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் இப்பொழுது அப்ளை செய்யுங்கள். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சூரிய கதிர்களால் ஏற்படும் சருமம் பாதிப்புகள் நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
சருமம் மென்மையாக – அழகு குறிப்புகள்:-
சருமம் எப்பொழுதும் இளமையாக மற்றும் மென்மையாக மாற. வெயிலில் காயவைத்து அரைத்த ஆவாரம்பூவை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் மூன்று துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
பின்பு 10 முதல் 15 நிமிடங்களை வரை அப்படியே வைத்திருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு முறை செய்து வர சருமம் என்றும் இளமையுடனும், மிருதுவாகவும் காணப்படும்.
குழந்தைகளுக்கான குளியல் பொடி செய்யலாம் வாங்க..!
சரும நிறம் அதிகரிக்க – அழகு குறிப்புகள்:-
பொடி செய்த ஆவாரம்பூவை ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளவும் அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும நிறம் அதிகரிக்கும். குறிப்பாக சருமத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்கி சருமம் பட்டுப்போல் ஜொலிக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள அழகு குறிப்பு டிப்ஸ் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் நிச்சயம் ட்ரை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் நன்றி…
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |