Baldness Hair Growth Home Remedy in Tamil
தலை முடி பிரச்சனை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தலையில் அந்த அந்த இடத்தில் முடி கொட்டி வளராமல் இருக்கும்..! அதற்கு நிறைய எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவது நம் அனைவரின் பழக்கமாக வைத்திருப்போம். அதேபோல் சிலருக்கு பயன்படுத்திய கொஞ்ச நாட்களில் நல்ல முடி வளர்ச்சி இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு நாம் எந்த எண்ணெய் ஷாம்புக்களை தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!
ஆனால் நாம் அனைவருமே பயன்படுத்திய கொஞ்ச நாட்களில் நல்ல முடிவளர்ச்சி இருக்கவேண்டும் என்று நினைத்து இது சரி வராது என்று மற்ற எண்ணெய்களுக்கும் ஷாம்புகளுக்கும் மாறிவிடுவோம். ஆனால் அப்படி செய்வது தவறு. எது பயன்படுத்தினாலும் அதனை தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் இன்று இயற்கையான முறையில் முடி இல்லாமல் உள்ள இடத்தில் புதிய முடி வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!
Baldness Hair Growth Home Remedy in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முதலில் 4 பூண்டு எடுத்துக் கொள்வோம். அதன் பின் 5 சின்னவெங்காயம் எடுத்துக் கொள்வோம். அடுத்ததாக நாம் எடுத்துக் கொள்ளும் பொருள் தான் உண்மையில் நல்ல முடி வளர்ச்சிக்கும் கருமையாகவும் வைக்க உதவுகிறது.
பூண்டு: பூண்டை எடுத்துக்கொள்ள காரணம் இதில் நிறைய ஆன்டி பாக்டீரியல் இருப்பதால் முடியின் வேரில் இருக்கக்கூடிய கிருமிகளை அளித்து தலை முடியை வளரச்செய்யும். அதுமட்டுமில்லாமல் பொடுகையும் நீக்கும்.
சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயத்தில் சல்பர் அதிகம் இருப்பதால் இதனுடைய சாறு தலையில் அப்ளை செய்வதால் உங்களுக்கு புதிய முடி வளர செய்யும். இதனை தடுவுவதால் வெள்ளை முடி வரும் என்று யாரும் நினைக்கவேண்டாம். சின்ன வெங்காயத்துடன் வேறு பொருட்கள் கலந்து தடவுவதால் வெள்ளை முடி வராது.
செம்பருத்தி இலை: செம்பருத்தி இலையை பற்றி நம் அனைவருக்கும் தெரியும் அது இயற்கை ஷாம்பு என்று. ஆகவே அதனை தலையில் அப்ளை செய்வதால் கருமையாக முடியை வளர செய்யும்.
செய்முறை:
பூண்டு, சின்ன வெங்காயம், செம்பருத்தி இலை அல்லது பூ மூன்றையும் சேர்த்து ஒரு முறை அரைத்து விட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்க்க வேண்டும் ஏனென்றால் செம்பருத்தி இலை வெங்காயம் இரண்டியில் தண்ணீர் சத்து அதிகம் இருப்பதால் அதில் இருக்கும் தண்ணீர் வரும். ஆகவே கொஞ்சமாக தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் பருக்கள் காணாமல் போக இதை ட்ரை பண்ணுங்க..!
பயன்படுத்தும் முறை:
தலை முடி அடர்த்தியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தலையில் எண்ணெய் வைத்து அதன் பின் இதனை அப்படியே அப்ளை செய்து குளிக்கலாம்.
குறிப்பு:
தலைமுடி இல்லாமல் இருக்கும் இடத்தில் முடி வளரவேண்டும் என்றால் முதல் நாள் தலையில் ஷாம்பு போட்டு குளித்து விடவும். மறுநாள் காலையில் வெறும் தலையில் இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்து குளித்து வந்தால் முடி இல்லாமல் இருக்கும் இடத்தில் முடி வளர்ச்சி ஏற்படும் கருமையாகவும் இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பாதியில் முடி உடைந்து உதிர்கிறதா..? இதை மட்டும் வாரத்தில் 1 முறை செய்யுங்கள்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |