தலை சீவினாலும் மண்டை வெளியில் தெரிகிறதா..? அப்படி என்றால் இதை மட்டும் Follow பண்ணுங்க..!

Advertisement

Baldness Hair Growth Home Remedy in Tamil

ஹாய் மக்களே..! இன்று என்ன பதிவு என்றால் தலை சீவினாலும் மண்டை வெளியில் தெரிகிறது என்று கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இந்த பதிவு உதவியாகஇருக்கும். இந்த டிப்ஸை நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் சொல்லலாம் ஹேர் பேக், எண்ணெய், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட் கொடுக்கும். சிலருக்கு அவர்களின் அம்மாவிற்கு நிறைய முடி இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும். அது ஏன் அப்படி உள்ளது குழந்தைகளுக்கும் மாறவேண்டுமோ என்று கேட்கலாம். இந்த முடி வளர்ச்சி குறைவாக இருக்க நிறைய காரணம் உள்ளது.

முதல் காரணம் தலை முடியை சரியாக பராமரிப்பு இல்லாமல் இருப்பது, தினமும் தலை குளிப்பது, அடிக்கடி ஷாம்பு போட்டு குளிப்பது, தலைக்கு சரியாக எண்ணெய் வைக்காமல் இருப்பது என்று நிறைய உள்ளது. இது அனைத்திற்கும் தீர்வு தரும் வகையில் அற்புதமான ஒரு ஜெல் போல, எண்ணெய் போல கூட பயன்படுத்திக் கொள்ளலாம். வாங்க அது எப்படி செய்யலாம் அதற்கு என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Baldness Hair Growth Home Remedy in Tamil:

தேவையான பொருட்கள்:

  • ஆமணக்கு எண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • ஆளிவிதை

செய்முறை:

 baldness hair growth home remedy in tamil

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் இல்லாமல் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அதில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் அது பேஸ்ட் போல் வந்துவிடும். அதனை அப்படியே எடுத்துக்கொள்ளவும்.

நீங்களே வியந்து பார்க்கும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு பொருளை மட்டும் போதும்

 baldness hair growth home remedy in tamil

இப்போது ஒரு கிண்ணத்தில் அரைத்த பேஸ்டை மாற்றிக்கொள்ளவும். அதில் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் இரண்டு பொருட்களையும் வைத்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்த பின்பு அதனை ஆறவிடவும்.

 does balding help in hair growth

அடுத்து ஒரு கடாயில் 2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அதில் 5 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை சேர்க்கவும். அது நன்கு கொதிக்கவிடவும். கொதிப்பு தன்மை வந்தவுடன் அதனை சூடாக ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி எடுத்துகொள்ளவும்.

அதேபோல் சூட்டில் வெங்காயம், ஆமணக்கு எண்ணெய் சேர்த்தவற்றை அதில் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்துவிடவும். அது பார்ப்பதற்கு ஒரு ஷாம்பு போல் இருக்கும். அதனை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இதை மட்டும் செய்யுங்கள் ஒரு முடி கூட கீழவிழாது அதீத முடி வளர்ச்சி கிடைக்கும்

பயன்படுத்தும் முறை:

நாம் செய்ததை வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்து குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்யும் போது வேரிலிருந்து அப்ளை செய்யவும். அப்ளை செய்யும் போது மசாஜ் செய்யவும். அதன் பிறகு 15 நிமிடம் ஊறவிட்டு ஷாம்பு போட்டு குளிக்கவும் அவ்வளவு தான்.

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா அப்படி என்றால் இதை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tmil
Advertisement