ஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள்..!

இயற்கை அழகு குறிப்புகள்

ஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips For Men)..!

பொதுவாக வெயிலில் வெளில அலைந்து, திரிந்து வேலைபார்க்கும் ஆண்களுக்கு சருமம் எப்பொழுதும் கருமையாகவும், வறண்டும், பொலிவிழந்து காணப்படும். இருப்பினும் ஆண்கள் தங்களது சரும அழகை பற்றி என்றும் கவலை படமாட்டார்கள், இருந்தாலும் ஆண்களின் சரும அழகை அதிகரிக்க இந்த பகுதியில் இயற்கை அழகு குறிப்புகள் நிறைய உள்ளது, அவற்றை படித்து ஆண்கள் அனைவரும் பயன்பெறவும்.

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (Beauty Tips For Men)..!

சரி வாங்க ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் (beauty tips for men) என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்..!

அரிசி மாவு ஃபேஸ் பேக்:-

தேவையான பொருட்கள்:-

  • அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
  • தேன் – ஒரு ஸ்பூன்
  • காய்ச்சாத பால் – தேவையான அளவு

பயன்படுத்தும் முறை:-

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் காய்ச்சாத பசும்பால் சிறிதளவு ஆகியவற்றை பேக் போல் நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த பேக்கை ஆண்கள் தங்களது சருமத்தில் அப்பளை செய்து சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு ஆண்கள் வாரத்தில் இரண்டு முறை செய்துவர, ஆண்களின் சருமம் என்றும் சிவப்பாக காணப்படும்.

கேரட் தக்காளி மாஸ்க்:-

தேவையான பொருட்கள்:-

  • கேரட் – ஒன்று பொடிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • தக்காளி –  ஒன்று பொடிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • காய்ச்சாத பசும் பால் – தேவையான அளவு.

பயன்படுத்தும் முறை:-

ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும், அவற்றை நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து ஒரு சுத்தமான பவுலில் அரைத்த இந்த பேஸ்டை தேவையான அளவு எடுத்து கொள்ளவும். பின்பு அவற்றில் காய்ச்சாத பசும் பாலை சிறிதளவு கலந்து, சருமத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்துவர, ஆண்களின் சருமம் என்றும் இளமையுடனும், பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

ஆண்கள் மேல் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இயற்கை அழகு குறிப்பு முறைகளை தினமும் செய்து வர சில நாட்களிலேயே இயற்கையான முறையில் அழகை அதிகரித்து விடலாம்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!