ஆண்களுக்கான அழகு குறிப்பு..! Beauty Tips For Men..!

ஆண்கள் அழகு அதிகரிக்க

ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள்..!

பெண்களுக்கு போட்டியாக ஆண்களும்  தங்களது அழகை(skin care) பராமரித்து வந்தால் பெண்களை விட ஆண்களும் அழகாக இருப்பாங்க. எனவே ஆண்களுக்கான சில அழகு குறிப்பை பற்றி இப்போது நாம் காண்போம். அதுவும் எளிதாக வீட்டில் கிடைக்க கூடிய சில பொருட்களை வைத்து பராமரிப்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

மீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

ஆண்களுக்கான உடை அழகு டிப்ஸ்..!

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 1:

பெண்களை விட ஆண்களுக்கு தான் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சனை எளிதாக சரி செய்ய முடியும்.

அதாவது தினமும் ஐந்து முறை முகத்தை கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை மறைந்து விடும்.

அல்லது குளித்த பிறகு சிறிதளவு கடலை மாவில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினாலும் முகத்தில் வழியும் எண்ணெய் மறைந்து, முகம் பொலிவுடன் காணப்படும்.

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 2:

ஆண்கள் தங்களது தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பில் அதிகளவு விட்டமின் இ சத்து நிறைந்துள்ள ஷாம்பை பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

அதுமட்டும் இன்றி தலை முடி வேர்களுக்கு அதிக வலுவினை சேர்க்கும். முடி எப்போதும் கருமையாக இருக்கும்.

முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 3:

சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும், அதன் காரணமாக அவர்களது உதடு அடர்ந்த கருமை நிறத்தில் இருக்கும், அவர்களுக்கான குறிப்பு தான் இது.

அதாவது ஒரு பீட்ருட் துண்டினை எடுத்து கொள்ளவும், அந்த துண்டினை சர்க்கரையில் விட்டு எடுத்து கொள்ளவும், இந்த துண்டினை உங்கள் உதட்டில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் கருமையான நிறத்தில் இருக்கும் உங்கள் உதடு ரோஸ் நிறத்திற்கு மாறும்.

அல்லது தினமும் பல் துவக்கிய பின்பு அதே பிரஷை கொண்டு உதட்டில் சிறிது நேரம் மசாஜ் செய்தால் உதட்டில் இருக்கும் வெடிப்பு மற்றும் கருமை நிறம் மாறும்.

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 4:

பொதுவாக வெளியே அலைந்து திரிந்து வேலை செய்யும் ஆண்களுக்கான குறிப்பு தான் இது. ஆண்கள் வெளிய செல்லும் போது சன் லோஷனை பயன்படுத்தி கொண்டு செல்லலாம்.

அதுவும் நீங்கள் பயன்படுத்தும் லோஷனில் SPF அளவு 50% மேல் இருக்கும் லோஷனை பயன்படுத்தாமல், 30% அளவு குறைவாக உள்ள லோஷனை பயன்படுத்துங்கள்.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 5:

தினமும் ஷேவிங் செய்யும் ஆண்கள் இப்போது அதிகபேர் இருக்கின்றனர். அவர்கள் ஷேவிங் செய்யும் போது குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துவாங்க.

குளிர்ந்த நீர் பயன்படுத்துவதற்கு பதிலாக கொஞ்சம் வெது வெதுப்பான நீரை பயன்படுத்தினால் ஷேவிங் செய்த பிறகு முகத்தில் ஏற்படும் அரிப்பு, நிறம் மாற்றம் மற்றும் ரேஷஸ் போன்ற பிரச்சனையை சரி செய்யும்.

ஆண்கள் அழகு அதிகரிக்க அழகு குறிப்புகள் 6:

பல ஆண்களுக்கு வேர்வை பிரச்சனை ஏற்படும். அவர்கள் தினமும் குளிக்கும்போது கடலை மாவு மற்றும் பயத்தமாவு இரண்டையும் சம அளவு எடுத்து கொண்டு அவற்றை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி வந்தால் வேர்வை பிரச்சனையில் இருந்து விடு பெறலாம்.

இதையும் படிக்கவும்–> ஆண்களுக்கான இயற்கை அழகு குறிப்புகள் ..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!