வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளியை கொண்டு முகப்பரு மற்றும் கருமையைப் போக்குங்க

Updated On: December 11, 2022 10:57 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

தக்காளியை கொண்டு சருமத்தை பாதுகாக்கலாம் வாங்க (tomato face pack)

தினமும் பலவகையான சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். இந்த பிரச்சனைக்கான தீர்வுகளையும் தேடுவோம். நமக்கு தினமும் கிடைக்கும் தக்காளியை கொண்டு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்துவிட முடியும். குறிப்பாக சரும செல்களுக்கு தேவைப்படும் கனிமச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் ஏராளமாக உள்ளது. இவற்றை தினமும் முகத்தில் பேக்காக (tomato face pack) போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், சரும கருமை என்று பல வகையான பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்குகிறது.

newரோஜா இதழ்களை வைத்து அசத்தலான 5 டிப்ஸ்..!

சரி வாங்க தக்காளியை கொண்டு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்று இப்போது நாம் காண்போம்.

பிம்பிளைப் போக்க / தக்காளி அழகு குறிப்பு:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி – 1
  • தேன் – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

தக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

முகப்பொலிவை அதிகரிக்க:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி -1
  • தண்ணீர் – 1 கப்

பயன்படுத்தும் முறை:

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். 15 நிமிடம் ஆனதும், நீரால் கழுவுங்கள். இப்படி ஒருமுறை செய்தாலே ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.

கருமையான சருமத்திற்கு:

தேவைப்படும் பொருட்கள்:

  • தக்காளி – 1
  • தேன் – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

இந்த ஃபேஸ் பேக்கிற்கு (tomato face pack) நன்கு கனிந்த தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

newமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

வறட்சி மிகுந்த சருமத்திற்கு / tomato for face in tamil:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி – 1/2
  • ஓட்ஸ் – 1 ஸ்பூன்
  • தேன் – ஸ்பூன்
  • முட்டையின் மஞ்சள் கரு – 1

பயன்படுத்தும் முறை:

தக்காளியை நன்கு அரைத்து, அத்துடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவி துணியால் உலர்த்த வேண்டும்.

சருமத்தில் ஏற்படும் கருவளையங்கள் நீங்க:

தேவைப்படும் பொருட்கள்:

  • தக்காளி ஜூஸ் – 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் – ஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் உலர வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் 1-2 முறை செய்து வந்தால், கருவளையங்கள் விரைவில் மறையும்.

கரும்புள்ளிகள் மறைய:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி சாறு – 1-2 ஸ்பூன்
  • எலுமிச்சை – சில துளிகள்

பயன்படுத்தும் முறை:

ஒரு பௌலில் தக்காளி சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-12 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின் துணியால் சருமத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இப்படி தினமும் 1 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை போய்விடும்.

newதலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now