கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய Hair Fall Tips Homemade in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்மில் பலருக்கும் ஒரு சில ஆரோக்கிய பிரச்சனைகள் அல்லது சத்து குறைவினால் தலைமுடி அதிகமாக கொட்டி மீண்டும் அந்த முடி வளராமலே இருக்கும். இதனால் நாமும் பல விதமான ஹேர் பேக்குகளை பயன்படுத்தி இருப்போம். பெரும்பாலும், கருவேப்பிலை, வெந்தயம் இதுபோன்ற பொருட்களை பயன்படுத்தி தான் ஹேர் பேக் போட்டு இருப்போம். இது ஒரு சிலருக்கு நல்ல ரிசல்ட் கொடுத்திருக்கும். ஒரு சிலருக்கு பலவிதமான ஹேர் பேக்குகளை பயன்படுத்தி இருந்தாலும் அது அந்த அளவிற்கு ரிசல்ட் கொடுத்து இருக்காது.
ஆகையால், இப்பதிவில் ஒரு புதுவிதமான யாரும் பயன்படுத்தாத ஹேர் பேக் பற்றி கொடுத்துள்ளோம். இந்த ஹேர் பேக்கில் பயன்படுத்தியிருக்கும் பொருட்கள் அனைத்தும் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது. எனவே, நீங்கள் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நபராக இருந்தால் இந்த பதிவினை முழுவதுமாக படித்து உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துங்கள்.
Best and New Natural Homemade Hair Pack in Tamil:

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- வெட்டி வேர்
- காய்ந்த ரோஜா இதழ்கள்
- சடாமாஞ்சில் வேர் (Sadamanjil Ver)
- பச்சை பயிறு
இந்த பொருட்களை உங்கள் முடிக்கு தேவையான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஹேர் பேக் செய்யும் முறை:

- முதலில், வெட்டி வேர், காய்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் சடாமாஞ்சில் வேர் (Sadamanjil Ver) இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இவை மூழ்கும் வரையில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.
- இதனை அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க விடுங்கள். இவை நன்றாக கொதித்து தண்ணீர் நன்றாக நிறம் மாறியதும் அதனை இறக்கி நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.
- அடுத்து, ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து, அதில் 1 கைப்பிடி அல்லது உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றதுபோல் பச்சை பயிரினை எடுத்துக்கொள்ளுங்கள். இதனை நன்றாக பொடியாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
30 நாட்களில் முடி நீளமாக வளர செய்யும் இந்த ஹேர் ஆயில்..!
- இப்போது, இந்த பச்சை பயிறு மாவில் கொதிக்க வைத்து ஆறவைத்துள்ள தண்ணீரை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- தலைமுடியின் வேர்க்கால் முதல் தலைமுடியின் நுனிப்பகுதி வரை எண்ணெயை அப்ளை செய்து 1 மணிநேரம் தலையில் வைத்து அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை அப்ளை செய்து 15 அல்லது 20 நிமிடம் வரை தேய்த்து வைத்து அதன் பிறகு தலைக்கு குளியுங்கள்.
- இவ்வாறு நீங்கள் இந்த ஹேர் பேக்கினை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மாதத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் கொட்டின உங்க முடி அனைத்தும் திரும்ப முளைக்கும். அதுமட்டுமில்லாமல் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














