வளரவே வளராதுன்னு நெனச்ச முடியை கூட அடர்த்தியாக வளர வைக்க இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

Advertisement

Best Homemade Hair Growth Serum in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் தலை முடியின் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அதனை நன்கு பராமரித்து கொள்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள மாசுபாடு மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக நமது தலை முடிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது. அதனால் அதனை சரி செய்வதற்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு முழுமையான பலனை அளித்ததா..? என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Best Natural Hair Growth Serum in Tamil:

Best Natural Hair Growth Serum in Tamil

இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக பார்க்கலாம் வாங்க. அதற்கு முன்னால் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.

  1. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
  3. ஆளிவிதை – 1 டேபிள் ஸ்பூன் 
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. வைட்டமின் E கேப்சூல் – 2
  6. தண்ணீர் – தேவையான அளவு 

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 30 நிமிடத்தில் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கடாயை எடுத்து கொள்ளவும்:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் அரிசி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆளிவிதை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் இதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அரிசி நன்கு வெந்ததற்கு பின்னால் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

வைட்டமின் E கேப்சூலை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் தலை முடியின்  வேர்களில் படுமாறு தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி நன்கு நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர்வதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> உங்க முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை நீக்கி முகம் நன்கு பொலிவு பெற பால் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement