Best Oil For Hair Growth Home Remedies
முடி வளர்ச்சிக்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இப்படி பயன்படுத்தும் போது அப்போது முடி வளர்ச்சி இருந்தாலும் நாளடைவில் முடியிலும், ஆரோக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும். வீட்டில் உள்ள பொருள் அதாவது தேங்காய் எண்ணையை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும். தேங்காய் எண்ணெய் தான் தினமும் தடவுகிறோம் என்று கேட்காதீர்கள். தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து தேய்த்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தத முடியும். வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேங்காய் எண்ணெய் மற்றும் கருவேப்பிலை:

கருவேப்பிலையில் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அதனால் இவை முடி உதிர்தலை நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். மேலும் கருவேப்பிலையில் பீட்டா கரோட்டின் இருப்பதால் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
கருவேப்பிலையை 2 நாட்களுக்கு வெயிலில் காய வைக்கவும். பிறகு 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் வடிகட்டியை வைத்து சக்கை இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணையை தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து தலை குளிக்கவும்.
கொளஞ்சி விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெய்:

கொளஞ்சி விதையில் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த விதைகளுடன் தேங்காய் எண்ணையை சேர்க்கும் போது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும்.
1 தேக்கரண்டி கொளஞ்சி விதைகளை பொடியாக அரைத்து கொள்ளவும். பின் தேங்காய் எண்ணெயில் இந்த பொடியை சேர்த்து 2 அல்லது 3 நாட்களுக்கு ஊற விடவும். ஊறியதும் இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து குளிக்கவும்.
தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்
வேப்ப எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்:

வேப்ப இலைகளை 2 கைப்பிடி எடுத்து வெயிலில் காய வைக்கவும். காய்ந்த வேப்ப இலைகளை பாதாம் எண்ணெயுடன் கொதிக்க வைக்க வேண்டும். இவை ஒரு வாரத்திற்கு கடாயில் ஊற வேண்டும். ஒரு வாரம் கழித்து எண்ணெயை வடிகட்டி கொள்ளவும். இந்த எண்ணெயை தலை குளிப்பதற்கு முன்பு தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிக்கவும்.
செம்பருத்தி பூ மற்றும் தேங்காய் எண்ணெய்:

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டமளிக்கும் சத்துக்களால் செறிவூட்டப்பட்ட செம்பருத்திப் பூக்கள் முடி வளர்ச்சியைஅதிகப்படுத்தும், முடி உதிர்வதைத் தடுக்கவும் மற்றும் முடி நரைப்பதை தடுக்கவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெயுடன் கலந்தால் இந்த ஃபார்முலா உங்கள் தலைமுடிக்கு ஒளிரும் பளபளப்பைக் கொடுக்கும், கருமையான மற்றும் பட்டுப்போன்ற முடி வளர்ச்சியைத் தரும்.
செம்பருத்தி பூக்களை கழுவிய பிறகு ஒரு தட்டில் வைத்து காய வைத்து கொள்ளவும். பிறகு கடாயில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு ஊற்றி சூடு வந்ததும் செம்பருத்தி பூக்களை சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயிலே வைத்து லேசாக சூடு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கவும்.
நரை முடியை கருமையாக மாற்ற இந்த மூன்று பொருட்களை கலந்து முடியில் அப்ளை செய்தால் போதும் ..!
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














