Best Way For Hair Growth Naturally in Tamil
வணக்கம் நண்பர்களே. முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தக்கூடிய ஒரு எளிமையான முறையினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எளிமையாக வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இதனை பயன்படுத்தி முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Grow Hair Faster and Thicker Naturally in Tamil:
தேவையான பொருட்கள்:
அரிசி- 3 ஸ்பூன்
கற்றாழை- 1 ஸ்பூன்
ஷாம்பு – 1 ஸ்பூன்
How To Grow Hair Faster in Tamil:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் அளவிற்கு அரிசியினை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி விடுங்கள்.
பிறகு, மீண்டும் அதில் 1/4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளுங்கள்.
அடுத்து, அதில் உள்ள தண்ணீரை மற்றும் வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் ஊற்றிக்கொள்ளுங்கள். இப்போது, இந்த அரிசி தண்ணீரில் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
நன்றாக கலந்ததும் இதனுடன் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு 1 ஸ்பூன் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக நுரை வரும் வரை கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை நீங்கள் தலைகுளிக்கும் போது தலைமுடியில் அப்ளை செய்து 2 அல்லது 4 நிமிடங்கள் வைத்து பிறகு தலையை அலச வேண்டும்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி நன்றாக நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..
நன்மைகள்:
அரிசி ஊறவைத்த தண்ணீரில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் அமினோ ஆசிட் அதிகமாக இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை தூண்டி அடர்த்தியாக வளர செய்கிறது.
அடுத்து கற்றாழையில் அமினோ ஆசிட் மற்றும் புரோட்டியோலிடிக் என்சைம் உள்ளது. இது முடியின் வேர்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வதை தடுத்து முடியை நீளமாக வளர செய்கிறது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |