Brighten Skin Naturally at Home
இன்றைய காலத்தை பொறுத்தவரை வெளியில் எங்கயாவது செல்ல வேண்டும் என்றால் கண்ணடி முன்பு நின்று 1 மணி நேரமாவது முகத்தை பராமரித்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் அப்போது தான் முகம் பளபளப்பாகவும் மற்றும் அழகாவும் தெரியும் என்பதனால் தான். சிலர் இதற்கு மாறாக முதல் நாள் முன்பாகவே நிறைய கிரீம் மற்றும் Face Pack என முகத்தில் அப்ளை செய்து விட்டு தூங்க செல்வார்கள். ஆனால் நீங்கள் செய்யும் இவை அனைத்தும் உங்களுக்கு முழுமையான பலனை அளிப்பது இல்லை. ஆகவே இயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்து நீங்கள் அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முகம் பளபளப்பாக என்ன செய்வது:
வெள்ளை கொண்டைக்கடலையில் வைட்டமின் B, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புசத்து போன்றவற்றை அடங்கியுள்ளது. அதனால் இதனுடைய பவுடரை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதால் முகம் நன்றாக பளபளப்பாகிவிடும்.குறிப்பு- 1
தேவையான பொருட்கள்:
- வெள்ளை கொண்டைக்கடலை- 1/2 கப்
- தேன்- 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் எடுத்துவைத்துள்ள கொண்டைக்கடலையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ள வேண்டும். முக்கியமாக பவுடர் அரைக்கும் போது தண்ணீர் பயன்படுத்தக்கூடாது.
பின்பு ஒரு பவுலில் கொண்டைக்கடலை பவுடர் 2 தேக்கரண்டி மற்றும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்த பிறகு பவுலில் இருக்கும் பொருட்களுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மீண்டும் 5 நிமிடம் கலந்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் Face பேக் தயார் ஆகிவிட்டது.
எப்படி பயன்படுத்துவது..?
தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் இயற்கையாக பளபளப்பாகிவிடும்.
இதையும் படியுங்கள்⇒ கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்
குறிப்பு- 2
தேவையான பொருட்கள்:
- வெள்ளைக்கொண்டை கடலை பவுடர்- 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
- தயிர்- 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள வெள்ளை கொண்டைக்கடலை பவுடர் 2 தேக்கரண்டி மற்றும் தயிர் 1 தேக்கரண்டி சேர்த்து 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு அதனுடன் எடுத்துவைத்துள்ள மஞ்சள் தூளினை சேர்த்து மீண்டும் நன்றாக 5 நிமிடம் வரை கலந்து வைத்து விடுங்கள். இப்போது முகத்திற்கு Face பேக் தயார்.
எப்படி பயன்படுத்துவது.?
நீங்கள் இயற்கையான முறையில் தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் அப்ளை செய்து விட்டு நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் மட்டும் போதும்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்ல Result கிடைக்க இதை Follow பண்ணி பாருங்களன்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |