தலை முதல் கால் வரை விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்..! beauty tips in tamil..!

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்

தலை முதல் கால் வரை விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள் Castor Oil for Face Tamil..!

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள் – Castor Oil for Face Tamil..! விளக்கெண்ணெயில் ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ளது. இது ஸ்கின், தலை முடி மற்றும் உடலுக்கு பல நல்ல கண்டிஷ்னராகவும், ஸ்கின் மாய்ச்சுரைசராகவும் விளக்கெண்ணெய் செயல்படுகிறது. சரி இந்த விளக்கெண்ணெயை ஸ்கின் மற்றும் தலை முடிக்கு எப்படி பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் என்று இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

newஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100%…

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்: 1

Castor Oil for Face Tamil..! நாம் அனைவருமே முகத்தை எப்பொழுதுமே பராமரித்து ஆரோக்கியமாக வைத்து கொள்வோம். ஆனால் உடலை அப்படியே விட்டுவிடுவோம் இதனால் தோல் பகுதி வறண்டு காணப்படும்.

எனவே இவற்றை சரிசெய்ய விளக்கெண்ணெய் பயன்படுகிறது. ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவு எண்ணெயை சமமாக கலந்து கை, கால் மற்றும் உடலில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.

அப்ளை செய்த பிறகு ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும் பின்பு குளிக்கவும். இவ்வாறு செய்வதினால் உங்கள் உடல் மிகவும் சாப்டாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம்.

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்: 2

Castor Oil for Face Tamil..! / விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்:பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே உடலில் ஸ்கெட்ச் மார்க் இருக்கும் அவற்றை மறைய செய்ய இந்த விளக்கெண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலில் எங்கு ஸ்கெட்ச் மார்க் இருக்கிறதோ, அங்கு இந்த விளக்கெண்ணெயை அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால், கூடிய விரைவிலேயே இந்த உடலில் உள்ள ஸ்கெட்ச் மார்க் மறைந்து விடும்.

new55 இயற்கை அழகு குறிப்புகள்..! Natural Beauty Tips | Skin care tips in tamil language

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்: 3

Castor Oil for Face Tamil..! சிலருக்கு உதடு எப்பொழுதுமே வறண்டு காணப்படும். அப்படிப்பட்டவர்கள் தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன், உதட்டில் சிறிதளவு விளக்கெண்ணெயை அப்ளை செய்யுங்கள்.

பின் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர உங்களுடைய உதடு மிகவும் மென்மையாக காணப்படும்.

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்: 4

Castor Oil for Face Tamil..! பொதுவாக பெண்கள் என்றாலே நகம் வளர்ப்பதில் அதிக ஆர்வமும், ஆசையும் இருக்கும். இருப்பினும் நகம் வளர்க்கும் போது நகம் உடைந்து விழுந்து விடும். இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கவலையாக இருப்பார்கள். இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு உள்ளது. அதாவது தினமும் நகங்களில் சிறிதளவு விளக்கெண்ணெயை தடவுங்கள். இவ்வாறு தினமும் செய்வதினால் நகம் மிகவும் உறுதியாக வளரும்.

newமீசை தாடி வேகமாக வளர சூப்பர் டிப்ஸ்..!

விளக்கெண்ணெய் அழகு குறிப்புகள்: 5

Castor Oil for Face Tamil..! வெயிலில் அலைந்து திரிந்து சருமம் பொலிவிழந்து, கருப்பாக காணப்படும். இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். இதற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளக்கெண்ணெய் பயன்படுகிறது. இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன், ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்த பின்பு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி, சருமம் பொலிவுடன் காணப்படும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil