அம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம்..!

அம்மை தழும்புகள் மறைய

அம்மை தழும்பு மறைய இயற்கை வைத்தியம் (Chicken Pox Treatment At Home)..!

சிலருக்கு வெயில் காலத்தில், வெயிலின் உஷ்ணத்தின் காரணமாக அம்மை நோய் ஏற்படும், இந்த நோய் குறிகிய நாட்களில் சரியாகிவிடும் என்றாலும், அவற்றினால் ஏற்படும் தழும்புகள் மட்டும் அவ்வளவு சீக்கிரமாக மறைவது இல்லை.

இருப்பினும் இந்த அம்மை தழும்புகள் மறைய சில இயற்கை வைத்தியம் உள்ளது அவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மிக விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்து விடலாம்.

சரி வாங்க அம்மை தழும்புகள் மறைய இயற்கை வைத்தியம் (chicken pox treatment at home) என்னென்ன உள்ளது என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

முகப்பரு, கருவளையம், முகசுருக்கம் இல்லாமல் போக இதைTry பண்ணுங்க..!

அம்மை தழும்பு மறைய எலுமிச்சை:-

நன்கு பழுத்த ஓரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கொள்ளவும் அதை குறுக்காக வெட்டவும். பின் அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

அம்மை தழும்புகள் மறைய முருங்கை இலை:

ஒரு கைப்பிடியளவு முருங்கை இலையை எடுத்து அவற்றை நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக பூச வேண்டும்.

பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்துவிடவும், இவ்வாறு தினமும் செய்து வர ஒரே வாரத்தில் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

அம்மை தழும்புகள் மறைய இயற்கை வைத்தியம்:-

அம்மை தழும்புகள் மறைய (chicken pox treatment at home) சிறிதளவு கசகசா, ஒரு சிறிய துண்டு மஞ்சள் மற்றும் கருவேப்பிலை சிறிதளவு இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து அம்மை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலறவிடுங்கள்.

பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.

பின்பு இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர அம்மை தழும்புகள் உடனே மறைந்து விடும்.

சருமத்தில் உள்ள மருக்கள் மறைய இயற்கை வைத்தியம் !!!

 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!