தலைமுடி அடர்த்தியாக வளர | Coconut Cream For Hair Growth in Tamil
தலை முடி பிரச்சனை அதிகமாக இருக்கிறது பனிக்காலத்தில் இதற்கு தீர்வு இல்லையா என்றால் கண்டிப்பாக உள்ளது. நாம் தலை முடியை எப்படி பாதுகாக்கிறோமோ அதன் அளவிற்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். அதிலும் தேங்காயை கொண்டு தலை முடிக்கு செய்யும் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
Pothualam.com பதிவில் இதுவரை தலைமுடிக்கு தேவையான அனைத்து டிப்ஸ்களை பதிவிட்டு வருகிறோம். அது அனைத்துமே உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுத்திருக்கும் அந்த வகையில் தேங்காயை கொண்டு இன்று நல்ல டிப்ஸ்களை பார்ப்போம் வாங்க..!
Coconut Cream For Hair Growth in Tamil:
தேவையான பொருட்கள்:
- தேங்காய் – 1
- ஆளிவிதை – 6 ஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப்: 1
முதல் நாள் இரவே தேங்காயை எடுத்து அதை திருவியோ அல்லது துண்டு துண்டாக நறுக்கியோ மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தீர்த்து பேஸ்ட் போல் அரைக்கவும்.
அரைத்த தேங்காயை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 நரைமுடி பிரச்சனையா இனி கவலை வேண்டாம் இந்த ஹேர் டையை ட்ரை பண்ணுங்க..!
ஸ்டேப்: 2
பின்பு அதனை ஒரு துணியை வைத்து வடிகட்டி பால் எடுக்கவும். பாலை ஒரு சில்வர் கிணத்தில் போட்டு முடி வைக்கவும்.
ஸ்டேப்: 3
மறுநாள் காலையில் பார்த்தால் அந்த தேங்காயில் சேர்த்து அரைத்த தண்ணீர் அனைத்தும் கீழ் இருக்கும் மேல் தேங்காயின் பேஸ்ட் மட்டும் இருக்கும் அதனை அப்படியே வடிகட்டி பேஸ்டை மட்டும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 4
ஒரு கடாயை எடுத்து அதில் 1.1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் ஆளிவிதையை சேர்த்து கொதிக்கவிடவும்.
அது கொதிக்க ஆரம்பித்தால் ஒரு மாதிரி கெட்டியான ஜெல் பதத்திற்கு வந்துவிடும். இப்போது அடுப்பை அணைத்து அதை வடிகட்டி ஆறவைக்கவும்.
ஸ்டேப்: 5
இப்போது தேங்காய் கிரீம் மற்றும் ஆளிவிதை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
ஸ்டேப்: 6
இப்போது தலையில் தேங்காய் எண்ணெய் கொஞ்சம் தடவிக்கொள்ளவும். அதாவது வெறும் தலையாக இருக்க கூடாது முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தடவிகொள்வது நல்லது.
அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தலை முடியை பிரித்து வேர் முதல் தலை முடி முழுவதிலும் தடவி 1/2 மணி நேரம் காத்திருக்கவும். பின் தலை அலசிவிடலாம். இது போன்று வாரத்தில் ஒரு முறை செய்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் ட்ரை பண்ணுங்க👉👉 பனிக்காலத்தில் அதிகம் தலைமுடி கொட்டுகிறதா..! தேங்காய் எண்ணையுடன் இதை கலந்து தடவுங்கள்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |