7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்..!

பாத வெடிப்பு நீங்க

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்!!!

பாதங்களில் வெடிப்பு (cracked heels) ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே அதற்கு காரணம்.

வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள்.

வீட்டில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டை கழுவி சுத்தம் செய்வது, தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு ஈரமாக இருக்கும்.

உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு, புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.

இதனால் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் பெண்கள். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது. இதற்கான தீர்வு இந்த பக்கத்தில் நாம் காண்போம்.

குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

பாத வெடிப்பு டிப்ஸ் 1:

ஒரு பிளாஸ்ட்டிக் டப்பாவில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி கொள்ளவும், அவற்றில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு ஷாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு அவற்றில் உங்கள் கால்களை வைத்து 15 நிமிடம் வரை ஊறவைக்கவும்.

15 நிமிடம் முடிந்ததும் உங்கள் கால்களை சுத்தம் செய்து விடவும். இவ்வாறு செய்வதினால் கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும். மேலும் கால்களும் சுத்தமாக இருக்கும். இந்த முறையை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

பாத வெடிப்பு டிப்ஸ் 2:

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை எடுத்து கொள்ளவும். அவற்றில் சிறுதளவு தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலவை நன்றாக கலந்ததும் அவற்றை உங்கள் கால்களில் தேய்த்து, நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு தினமும் இரண்டு முறை செய்து வந்தால் கால்களில் உள்ள (cracked heels) பாத வெடிப்புகள் சரியாகும்.

பாத வெடிப்பு டிப்ஸ் 3:

தினமும் இரவு தூங்கும் போது கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தாலே கால்களில் உள்ள வெடிப்புகள் சரியாகும்.

பாத வெடிப்பு டிப்ஸ் 4:

தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கற்களில் உங்கள் கால்களை தேய்த்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் 5:

பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் 6:

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து, அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு மறைந்து விடும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ் 7:

சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு மருதாணி மற்றும் சிறிதளவு பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வர பாத வெடிப்புகள் (cracked heels) சரியாகும்.

பாத வெடிப்பு சரியாக டிப்ஸ் 8:

தேன் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக குழைத்து கொள்ளவும். பின்பு இந்த கலவையை இரவு தூங்கும் போது கால்களில் போட்டு வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து விடும்.

பாத வெடிப்பு சரியாக டிப்ஸ் 9:

தினமும் இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெயை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணம் என்ன ?

 

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil