Curry Leaves Use in Hair
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். சில பேர் இருக்கின்ற முடி உதிராமல் இருந்தாலே போதுமானது என்று நினைப்பார்கள். மற்றவர்களுக்கு உள்ள முடியை பார்த்து ஆசைப்பட்டு அவர்கள் முடியின் போல் நம்முடைய முடியும் அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக கடையில் விற்கும் ஆயில், ஷாம்பூ என அனைத்தையும் ட்ரை செய்வார்கள். இந்த மாதிரி கெமிக்கல் நிறைந்ததை பயன்படுத்தும் வேண்டுமானால் நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும் அதை நிறுத்திவிட்டீர்கள் என்றால் முடியானது உதிர ஆரம்பிக்கும். அதனால் இயற்கையான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கருவேப்பிலையை வைத்து முடியை வளர செய்யலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருவேப்பிலையை எண்ணெய் தயாரிப்பது எப்படி.?
கருவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த சத்துக்கள் புதிய முடி வளர்ச்சியை தூண்டும் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன . கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் புரதம் முடியை வலுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் இரும்பு மற்றும் வைட்டமின்கள் பி மற்றும் சி ஆகியவை உச்சந்தலையை வளர்க்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!
முதலில் உங்கள் முடிக்கு தேவையான கருவேப்பிலையை எடுத்து கழுவி கொள்ளவும்.
பிறகு கடாய் வைத்து அதில் 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கழுவி வைத்த கருவேப்பிலையை சேர்க்கவும்.
முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விட வேண்டும். கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள் எண்ணெயில் இறங்கி நிறம் மாற ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து எண்ணெயை ஆற விடவும்.
பயன்படுத்துவது எப்படி.?
இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் மசாஜ் செய்யவும். நன்றாக எண்ணெய் தேய்த்து குளித்தால் எப்படி எண்ணெயை தேய்ப்போமா அது போல மசாஜ் செய்து 1/2 மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இது போல் நீங்கள் வாரத்தில் இரு முறை என்று 3 வாரம் இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தாலே உங்களின் முடியின் வளர்ச்சியை காண்பீர்கள்.
1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |